முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் முடிந்து பல மாதங்களாகியும் அகற்றப்படாத இரும்பு,பிளாஸ்டிக் பேரிகார்டுகள்முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் முடிந்து பல மாதங்களாகியும் போலீசார் வைத்துள்ள இரும்பு,பிளாஸ்டிக் பேரிகார்டுகள் அகற்றப்படவில்லை.இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்  நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும்  இரும்பு மற்றும் பிளாஸ்டிக்கிலான பேரிகார்டுகள் நூற்றுக்கணக்கில் கொண்டு வரப்பட்டன. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட இந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் விநாயகர் ஊர்வலம் புறப்படும் ஜாம்புவானோடை சிவன்கோவிலடி துவங்கி ஊர்வலபாதை மற்றும் முக்கிய தெருக்கள் நடைபாதைகளை தடுத்து வைக்கபட்டன. இதில் பெரும்பாலானவை ஆசாத்நகர், பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் ஊர்வலப்பாதைகளிலும் தற்காலிக செக்போஸ்டுகளிலும் வைக்கப்பட்டிருந்தன. சில பேரிகார்டுகள் பாதுகாப்பாக வைக்கப்படாததால் உடைந்து சேதமாகி ஆங்காங்கே உள்ளது.

இந்நிலையில் ஊர்வலம் முடிந்து ஓராண்டை கடந்தும் பேரிகார்டுகளில் பெரும்பாலானவை அகற்றப்படவில்லை. கொண்டு வரப்பட்ட உரிய இடத்திற்கும் திருப்பி அனுப்பப்படவில்லை.  இதில் குறிப்பாக நாகை மாவட்டத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பேரிகார்டுகள் பல திரும்ப நாகை போலீசாரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விபரம் முத்துப்பேட்டை போலீசாருக்கு தெரிந்ததையடுத்து போலீசார் பல்வேறு பகுதிக்கு சென்று பார்த்தபோது இரும்பிலான பேரிகார்டுகள் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு பைபாஸ் சாலை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் பயன்பாட்டில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாகை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை பகுதியில் போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கும் பேரி கார்டுகளை உடனடியாக பாதுகாத்து  அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.