முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் அவதிமுத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் தினமும் போக்குவரத்து ெநருக்கடியால் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதி நகரில் முக்கிய பகுதியாகும். இதில் மூன்று முக்கிய சாலைகள் பிரியும் மையத்தில் அமைந்துள்ளது. இதில் ஒருபுறம்  மன்னார்குடி, கும்பகோணம் பகுதிகளுக்கும், மறுபுறம் திருத்துறைப்பூண்டி, நாகை, காரைக்கால், பாண்டிச்சேரி, வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கும், மற்றொருபுறம் பட்டுக்கோட்டை, தஞ்சை, அதிராம்பட்டினம், ராமநாதபுரம், தொண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.

இங்கு முத்துப்பேட்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பயணிகள் வந்து செல்கின்றனர். சற்று தூரத்தில் புதிய பேருந்து நிலையம் இருந்தாலும் அங்கு போதிய வசதிகள் வியாபார நிறுவனங்கள் இல்லாததால் பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. அதனால் பழைய பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இங்கு உள்ள வியாபார நிறுவனத்தாரும் தங்களது வாகனங்களை கடை வாசலில் நிறுத்தி விடுவதால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும் இதன் அருகே பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை தொடக்கக்கல்வி அலுவலம், அரசு பள்ளிகள், தனியார; மருத்துவமனைகள், வங்கிகள் போன்ற முக்கிய அலுவலங்களும் இருப்பதால் அதற்கு வரும் வாகனங்களும் பொதுமக்கள் அதிகளவில் உள்ளது. இந்த போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இப்பகுதியில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என  பல ஆண்டுகளாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது சென்ற இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் கூட ஆக்கிரமிப்புகளை  அகற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதுநாள்வரை அரசு சார;பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை  சரி செய்ய போலீசாரும் பணியில் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அதிமுக வெற்றி கொண்டாட்டத்தின் போது பலமணிநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கி தவித்தது.

அதேபோல் இரண்டாவது நாளாக நேற்றும்  மதியம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலை தொடர்வதால் பொதுமக்கள் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேரூராட்சியில் போடப்பட்ட தீர்மானம் படி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய போலீசார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.