அமீரக வானிலை முன்னறிவிப்பு! அதிக குளிர், மழை, பனிமழைக்கு வாய்ப்பு!அமீரகத்தில் தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது, இது இன்னும் வலுவடைந்து இன்று வியாழன் முதல் வார இறுதி வரை குளிர் அதிகரிக்கும் என்றும் ராஸ் அல் கைமாவில் அமைந்திருக்கும் சுமார் 1900 மீட்டருக்கு மேலுள்ளதும் அமீரகத்தின் உயரமான சிகரமுமான ஜெபல் அல் ஜைஸ் (Jabal Al Jais) போன்ற மலைப்பிரதேசங்களில் வெண்பனிமழை (Snow fall) சிறிதளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெபல் அல் ஜைஸின் தட்பவெப்ப நிலை 0°Cயிலிருந்து 2°C வரை நிலவும். மேலும் அமீரகத்தின் பல இடங்களிலும் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

ராஸ் அல் கைமாவில் இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு 'ராலத் அல் ஜைஸ்' (Ra’alat Al Jais) எனும் மலை சிகரத்திலும், 2009, 2012 ஆம் ஆண்டுகளிலும் ஜெபல் அல் ஜைஸ் சிகரங்களிலும் வெண்பனி (Snow Blanket) போர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.