துபாயில் ஆபத்தான கார் ஸ்டண்ட் நடத்தியவர்களுக்கு விசித்திர தண்டனை !துபையின் 'சிட்டி வாக்' (City Walk) பகுதியில் தூறல் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் வழுக்கும் சாலைகளில், போக்குவரத்து நிறைந்திருந்த வேளையில், அங்கிருக்கும் குடும்பத்தினர், குழந்தைகள், கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள், பிற வாகனங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும் ஆபத்தான முறையில் சிலர் 'கார் ஸ்டண்ட்' (Dangerous Car Stunt) எனப்படும் சாகச விளையாட்டுக்களில் தங்களுடைய வாகனத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து கார் ஸ்டண்டில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தினர்.

இதற்கிடையில், இந்த ஆபத்தான சாகச விளையாட்டில் ஈடுபட்டு பிறருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொண்டதையறிந்த துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களே நேரடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு தண்டனை வழங்கினார்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் அனைவரும் தினமும் 4 மணிநேரம் தொடர்ந்து 30 நாட்களுக்கு துபையின் வீதிகளை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

தண்டனைக்குள்ளான மூன்று சிறுவர்களும் பெரும் பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பது குறிப்பிட்ட தக்கது

Source: Emirates 247
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.