தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றிய தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்.

அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் மணவை முஸ்தபா.இவர் எழுதிய "இசுலாமும் சமய நல்லிணக்கமும் " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு பெற்றது.

மேலும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்" எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டிலில் முதல் பரிசும் பெற்றுள்ளது.

தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். அதன் மூலம் இணைய நூலகமும் தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.