செல்போன் வைத்துள்ளவர்களா நீங்கள்? ஆதார் எண் இல்லையேல் இணைப்பு துண்டிப்பு?நாடு முழுவதும் அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. அதற்காக ஆதார் பதிவு செய்ய மக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்து.

இந்நிலையில், ஆதாரை கட்டாயமாக்கக்கோரிய பொதுநல வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், செல்போன் சேவைகளைப்பெற ஆதார் எண் கட்டாயம். ஓர் ஆண்டுக்குள் தற்போதுள்ள செல்போன் சேவைகள் அனைத்தும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை ஓராண்டுக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.