முத்துப்பேட்டை பேட்டை சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆட்டோ சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் எஸ்.எஸ்.பக்கர்அலி சாஹீப் தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக செயலாளர் ஜகபருல்லா வரவேற்று பேசினார், பொருளாளர் ஜெகபர் சாதிக் வரவு செலவு கணக்கை வசித்தார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது இதில் தலைவராக மீண்டும் எஸ்.எஸ்.பக்கர்அலி சாஹீப், செயலாளராக ஜெகபருல்லா, பொருளாளராக ஜெகபர் சாதிக், துணைத்தலைவராக கார்த்திகேயன், துணைச்செயலாளர்களாக ஜாஹீர் உசேன், ஜெகபர் அலி, மைதீன், செயற்குழு உறுப்பினர்களாக முகமது யூனுஸ், பீர்முகமது, கார்த்திக், ரகுநாதன், சுல்தான், ஹாஜா மைதீன், முகமது காசீம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முத்துப்பேட்டையில் முக்கிய சாலையான பேட்டை சிமிண்ட் முற்றிலும் சேதமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன இதனை சீரமைத்து தரவேண்டும் கோரியும் இதுநாள்வரை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வில்லை உடனடியாக சாலையை சீரமைத்து தரவேண்டும் இல்லையேல் விரைவில் போராட்டம் நடத்தப்படும், அதேபோல் முத்துப்பேட்டையில் உள்ள சேதமாகியுள்ள அணைத்து சாலைகளையும் செப்பனிட்டு சீரமைக்க வேண்டும், மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி வருவதற்க்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான ஆட்டோ சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.