முத்துப்பேட்டையில் இரவில் நல்ல மழை பகலில் கடும் வெயில்முத்துப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு லேசாக துவங்கிய மழை நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடைவிடாமல் பெய்தது. இதனால் அதிகாலையில் குளிரான சீதோஷண நிலை காணப்பட்டது. சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் மழைக்கு குளம் மற்றும் குட்டைகளில் நீர் தேங்கியது. இதன்மூலம் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. மேலும் நிலத்தடி நீராதாரத்தையும் பெற்று தந்தது. ஆனால் காலதாமதமாக பெய்த இந்த மழை இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இந்நிலையில் இரவில் பெய்த நல்ல மழைக்கு மாறாக நேற்று காலைமுதல் மதியம் வரை வழக்கத்துக்கு மாறாக கடும் வெயில் காணப்பட்டது. மாலை  மேகமூட்டத் துடன் குளிர்ந்த காற்று வீசியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.