மு.க.ஸ்டாலின் மீது தாக்குதலை கண்டித்து முத்துப்பேட்டை அருகே கடைகள் அடைப்பு கிராம மக்கள் மற்றும் திமுகவினர் உண்ணாவிரதம்!அதிமுக ஆட்சியை அகற்றும் வரை அறவழியில் ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும்' திமுக விவசாய அணி மாநில செயலாளர் முன்னால் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் பேட்டி.

முத்துப்பேட்டை பிப்.21
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோட்டூர் ஓன்றியம் சித்தமல்லி கடைவீதி அண்ணா சிலை அருகில் திமுக மையக்கழகத்தின் சார்பில் தமிழக சட்ட சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பேராட்டத்திற்கு திமுக விவசாய அணி மாநில செயலாளர் முன்னால் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல், மாவட்ட துணை செயலாளர் எம்எஸ்.கார்த்தி, மாவட்ட பிரதிநிதி அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணி மோகன், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் சுமத்திராமறையரசு, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சனி, ஊராட்சி செயலாளர்கள் சிவசங்கரி, இனியன், அய்யப்பன், ராமச்சந்திரன், குணசேகரன், மைய செயலாளர் கணேசன், நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான், பேரூராட்சி முன்னால் கவுன்சிலர் சிவஅய்யப்பன், நகர நிர்வாகிகள் நிசார் அகமது, நக்கீரன், பிரபாகர், காளிதாஸ் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலார்கள் மற்றும் 150 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். உண்ணாவிரதத்தை முன்னிட்டு சித்தமல்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

பேராட்டத்தில் தலைமை வகித்து பேசிய ஏ.கே.எஸ்.விஜயன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டஒழுங்கு கேவலமான படு பாதளத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதிமுக அரசு கூட்டாக கொள்ளை அடிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். நேற்றையதினம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஜனநாய ரீதியாக சட்டமன்றத்தை நடத்தாமல் சபாநாயகர் தனபால் தன்போக்கிற்கு நடத்தியிருக்கிறார். இதனால் நமது தமிழ் நாட்டின் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இது இந்திய ஜனநாயகதுக்கு எதிரான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதிபதி வரதராஜனை உச்சநீதி மன்ற நீதிபதியாக அழகுபார்த்தவர் திமுக தலைவர் கருணாநிதி, கே.ஆர்.நாராயணன் குடியரசு தலைவராக பதவியேற்க உறுதுணையாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி இதுபோண்று சாதாரண, சாமான்ய மக்களை பல்வேறு உயர் பொறுப்புக்கு வர உந்துசக்தியாக இருந்த இயக்கம் திமுக, ஆனால் சபாநாயகர் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்ற சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டதாக தவறான செய்திகளை சொல்லி மக்களை குழப்பப்பார்க்கிறார். இதனை மக்கள் ஒருகாலும் நம்பமாட்டார்கள் இதனை கண்டிக்கும் வகையிலும் தளபதி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்தான் இன்றையதினம் சித்தமல்லி கிராமத்தில் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதிமுக ஆட்சியை அகற்றும் வரை இதுபோன்ற அறவழியில் ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டைShare on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.