புனித மக்கா ஹரம் ஷரீஃபில் தீக்குளிக்க முயன்றவர் கைது!முஸ்லீம்களின் புனிதத் தலமான மக்கா ஹரம் ஷரீஃபில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் புனித கஃபாவின் அருகில் தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்றபோது யாத்ரீகர்கள் மற்றும் புனித ஹரம் ஷரீஃப் போலீஸாரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

புனித கஃபாவுக்கான போலீஸ் விடுத்துள்ள அறிக்கையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் புனித கஃபாவின் கிஸ்வா துணிகளை எரிக்க முயன்றார் என்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலையும் மறுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

Source: http://english.alarabiya.net/
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.