முத்துப்பேட்டை நகரில் கருவேல மரங்களை அகற்ற வர்த்தக கழகம் கோரிக்கைமுத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் செயற்குழு கூட்டம் தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வியாபாரிகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து பலரும் பேசினர். கூட்டத்தில் முத்துப்பேட்டை பகுதியில் கடும் வறட்சிகள் ஏற்பட்டுள்ளது. குளம், குட்டைகள், போர்களில் தண்ணீர் இல்லை. இதற்கு பேரூராட்சி தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் முத்துப்பேட்டை நகரத்தை வறட்சிக்கு தள்ளும் கருவேல மரங்கள் பல பகுதிகளில் மண்டி கிடக்கிறது.

இதனை பேரூராட்சி நிர்வாகம் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மத்திய மாநில அரசு மீண்டும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்து கடைகளை அடைத்த வியாபாரிகள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்து உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.