காந்தி கொலை வழக்கில் கோட்ஷேவுக்கு எதிரான ஆவணங்களை காணவில்லை!தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கில், இறுதி குற்றப்பத்திரிக்கை மற்றும் கோட்சேவை தூக்கிலிட கோர்ட் இட்ட ஆணை உள்ளிட்ட ஆவணங்கள் மாயமாகி உள்ளன.மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஹே மந்த் பாண்டா. ஆராய்ச்சியாளர். சமீபத்தில், காந்தியின் மரணம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, மகாத்மா காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட இறுதி குற்றப்பத்திரிக்கையும், (பைனல் சார்ஜ் சீட்) மற்றும் கோட்சேவை தூக்கிலிடும்படி கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறிப்பும் கிடைக்கவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த ஆவணங்களை கேட்டார்.

மூன்று கேள்விகள்:
கடிதத்தில் மூன்று கேள்விகளை பாண்டா எழுப்பியிருந்தார்.

1. காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று குற்றவாளிகளை தேடுவதற்காக டில்லி போலீசார் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தனர்.

2. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

3. இறுதி குற்றப்பத்திரிக்கையும், (பைனல் சார்ஜ் சீட்) மற்றும் கோட்சேவை தூக்கிலிடும்படி கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறிப்பும் எங்கே.

ஆவணங்கள் இல்லை: இதற்கு பதில் அளித்த தேசிய ஆவண காப்பகம், மத்திய தகவல் ஆணையத்தை தொடர்பு கொண்டது. அந்த ஆணையம் குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று கூறி உள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறுகையில், ‘குறிப்பிட்ட தகவல்கள் குறித்து மத்திய தகவல் ஆணையம் எந்த விபரத்தையும் கூறவில்லை,’ என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.