சிவ சேனா தலைவர் மீது கற்பழிப்பு வழக்குமகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த சிவா சேனா தலைவர் சுபாஷ் மன்சுல்கர் மீது விதல்வாடி காவல் நிலையத்தில் 35 வயது பெண்ணை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனவரி 2015 இல் மன்சுல்கர் தங்கள் குடும்ப சொத்து பிரச்னையை தீர்ப்பதாக கூறி தன்னை அவரது வீட்டிற்கு அழைத்ததாகவும் அங்கு தன்னை அவர் வற்புறுத்தி கற்பழித்ததாகவும் அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளர். இது தொடர்பான வழக்கு கடந்த திங்கள் கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தங்கள் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு  மன்சுல்கர் தரப்பில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மற்றொரு சிவ சேனா தலைவர், முனிசிபல் தேர்தலின் போது சிவ சேனா கட்சியின் பெயரை கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.