செங்கல் அறுக்கும் கருவி கண்டு பிடிப்பு முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவிக்கு “குருசேத்ரா” விருதுதிருவாரூர; மாவட்டம், முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவிக்கு செங்கல் அறுக்கும் கருவியை கண்டு பிடித்தற்காக அண்ணா பல்கலைக்கழகம் குருசேத்ரா விருது வழங்கியது.  சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் சிறந்த படைப்புகளில் ஐந்தினை மட்டும் தேர்வு செய்து அதனை கண்டுபிடித்த சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் “குருசேத்ரா” எனும் விருதை வழங்கி குருசேத்ரா விழா நடத்தி வருகிறது. இந்தநிலையில் இந்தாண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகம் “குருசேத்ரா” விருது 2017 க்காக எளியமுறையில்  செங்கல் அறுக்கும் கருவியை உருவாக்கிய  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ஆர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதும் பாரா ட்டு பத்திரமும் 10ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.மாணவி ஆர்த்திக்கு பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன், ஆசிரிய, ஆசிரியைகள் பொதுமக்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.