தேசத்தின் மாவீரர் "கர்னல்.நிஜாமுதீன் மரணமடைந்தார்நேற்று  (06/02/2017)மரணமடைந்த தேசத்தின் மாவீரர் "கர்னல்.நிஜாமுதீன்" அவர்களை பற்றிய, தேசப்பற்றை பீறிட்டு வரச்செய்யும் தகவல்:

சுதந்திர வேட்க்கையால் நேதாஜியின் INDIAN NATIONAL ARMY ல் சேர்ந்து, நேதாஜியின் மிக நெருங்கிய பர்சனல் அசிஸ்ட்டன்டாகவும், நேதாஜியின் பாதுகாப்பு வீரராகவும், நேதாஜியின் டிரைவராகவும், நேதாஜியுடன் கடைசி வரை இருந்தவர். போஸ் நிஜாமுதீனை INA வின் படைப்பிரிவு தலைவராக்கினார்.

நேதாஜியின் அனைத்து பயணங்களிலும் உடனிருந்தவர். குறிப்பாக INA -வை வலுப்படுத்த நேதாஜி சென்ற ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா பயணங்களில் கர்னல்.நிஜாமுதீன் அவர்களைத்தான் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஹிட்லரை சந்தித்து நேதாஜி தன் INA படையை வலுப்படுத்த உதவி கேட்க்க சென்ற போதும் கர்னல்.நிஜாமுதீன் அவர்களை தான் உடன் அழைத்துச்சென்றார் மாவீரர் போஸ்.

தனது மனைவி அஜ்புன்னிஸா (வயது 106), மகள் ஹபீபுன்னிஸா (85), மகன் அக்தர் அலி (72), அன்வர் அலி (65), ஷேக் அக்ரம் (55) ஆகியோருடன் உ.பி ஆஜம் நகர் மாவட்டத்யில் வசித்து வந்த கர்னல்.நிஜாமுதீன் தனது 116 ஆம் வயதில் நேற்று  முதுமையின் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார்.

இந்த மண்ணின் மாபெரும் விதைகளில் ஒன்று மரணத்தை முத்தமிட்டுள்ளது என்றால் மிகையாகாது!
தேசத்தை உருவாக்க நின்றவர்!!
இறைவன் உன் சேவைகளுக்கும், வீரத்திற்கும் பரிசளிக்கட்டும்!
உனக்கு கடன்பட்டுள்ள இந்த தேசமும் நாங்களும் உன்னை என்றும் மறவோம்!

உரத்த குரல்களுடன் ஜெய்ஹிந்த்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.