காஞ்சிபுரத்தில் வக்பு வாரிய நிலத்தில் கோவில் கட்ட இந்துமுன்னணி ஆர்.எஸ்.எஸ் முயற்சி கண்டுகொள்ளாத காவல்துறை காஞ்சிபுரத்தில் இந்து முண்ணணி,ஆர்.எஸ்.எஸ் க்கு துணை போகும் காவல் துறை ! ஒத்து ஊதும் தமிழக வக்பு வாரியம் !

காஞ்சிபுரத்தில் 400 வருடங்கள் பழமையான ஹமீது அவ்லியா தர்ஹா உள்ளது.தர்காவை சுற்றி முஸ்லிம்கள் திரளாக வாழ்ந்து வருகின்றனர். நாயக்க மன்னர்கள் காலத்தில் பீஜப்பூரிலிருந்து வந்த இஸ்லாமிய பெரியவரின் மனித தேய சேவைகளை பாராட்டி வழங்கிய பல ஏக்கர் நிலத்தின் நடுவே பெரியவரின் அடக்கவிடமும் அமைந்துள்ளது. இந்த தர்கா வளாகத்தில் குப்பையோடு குப்பையாக கிடந்த கல்லாலான உடைந்த லிங்கம் பல வருடங்கள் கேட்பாரற்று கிடந்தது. திடீரென்று ஒரு இரவு லிங்கம் தர்கா வளாகத்தினுள் ஒரு ஓரத்தில் ஆராதனை,அர்ச்சனை செய்யப்பட்டு எங்கிருந்தோ கூட்டம்,கூட்டமாக பக்தர்கள் என்ற போர்வையில் குவிய ஆரம்பித்து விட்டனர். லிங்கத்தின் அருகே அந்த பகுதியில் வாழக்கூடிய மக்களின் வசதிக்காக பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. திடீரென லிங்கத்துக்கு புதிய பெயர் சூட்டப்பட்டு புதிய கோவிலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது லிங்கத்துக்கு கோயில் எழுப்பவும்,திருவிழா நடத்தவும் திட்டமிட்டு அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை பெரிய காஞ்சிபுரம் காவல்துறை ஆய்வாளர்,தாசில்தார் மிரட்டி வருகின்றனர். திடீரென இந்து முண்ணனி,RSS தீவிரவாத அமைப்புகளின் கொடிகள் நட்டப்பட்டுள்ளன.தமுமுக வின் கடுமையான எதிர்ப்பால் தற்போது கொடிகள் அகற்றப்பட்டது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம்களின் இடத்தில் மதப்பதட்டத்தை தூண்டும் வகையில் கோவில் கட்டி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் இந்து முண்ணணி கும்பலுக்கு சிவ காஞ்சி ஆய்வாளர்,தாசில்தார் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். முஸ்லிம்களை மிரட்டி வக்பு வாரிய இடத்தில் கோவில் கட்ட முயற்சித்து வருகின்றனர்.

தமிழக அரசு இந்த விசயத்தில் தலையிட்டு மத மோதலை தூண்டும் கும்பலை அரசு அதிகாரிகள், காவி கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மதப் பதட்டத்தை தணிக்க வேண்டும்.
தமிழ்நாடு வக்பு வாரியம் இந்த இடத்தை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கா விட்டால் வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மக்கள் திட்டமிட்டுள்ளனர்
இனியவன் FB
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.