பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பாஜக தேசபக்தர்இந்திய இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்துவரும் 11 பேரை மத்திய பிரதேச தீவிரவாத தடுப்பு படை கைது செய்துள்ளது. இந்த 11 பேரில் தேசப்பற்றை தங்களுக்கே உற்றித்தாக்கிக் கொண்ட பாஜக கவுன்சிலரின் சகோதர் ஒருவரும் அடக்கம்.

தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் சீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தனியே ஒரு தொலைபேசி  இணைப்பகத்தையே நடத்தி வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது Indian Telegraph Act இன் பிரிவின் கீழும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 122 மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு தேசத்தின் மீது போர் தொடுக்க ஆயுதங்கள், தகவல்கள் உட்பட பொருட்களை சேகரிப்பது தொடர்பானதாகும்.

ATS இன் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சீவ் ஷாமி, குற்றவாளிகளில் ஐந்து பேர் குவாலியரில் பிடிபட்டதாகவும் மூன்று பேர் போபாலிலும், இரண்டு பேர் ஜபல்பூரிலும் ஒருவர் சட்னாவிலும் பிடிபட்டதாக கூறியுள்ளார். இதில் ஒருவர் பாச கவுன்சிலரின் சகோதரர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த 11 நபர்களில் சட்னாவில் கைது செய்யப்பட்ட பல்ராம் என்பவர் தான் இந்த குழுவின் மூலகர்த்தா என்று அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்ராம் என்பவர் ஜம்முவில் உள்ள இருவரின் செயல்பாட்டிற்கு நிதி யுதவி அளித்து வந்ததாகவும் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து அவர்களை கையாள்பவர்களுக்கு அவ்வப்போது தகவல் அனுப்பி வைத்துகொண்டிருன்தனர் என்றும் இவர்கள் பல வங்கிக் கணக்குகள் மூலம் தேச விரோத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்த சத்விந்தர் மற்றும் தாடு என்பவர்களை ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இருந்து கடந்த 2016 நவம்பர் கைது செய்ததாக ஷாமி தெரிவித்துள்ளார். இவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்ததாக ஷாமி தெரிவித்துள்ளார்.

பல்ராம் மற்றும் அவரது உதவியாளர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் தனி தொலைபேசி இணைப்பகங்களை நடத்தி வந்ததாகவும் இந்த இணைப்பகங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  பல்ராமின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தனர் என்றும் அந்த பணம் பின்னர் ஜம்முவில் உள்ள ISI உளவாளிகளுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிம் பாக்ஸ் எனப்படும் கருவிகள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் அழைப்புகளை ,மறைத்து வேறு பகுதிகளில் உள்ள அழைப்புகளைப் போன்று மாற்றியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய இராணுவ அதிகாரிகள் போன்று ISI உளவாளிகள் அழைப்பு விடுத்து இராணுவ தகவல்களை பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இது போன்ற மற்றுமொரு உளவு மோசடி குழுவினரை உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் ATS கைது செய்துள்ளது. இவர்கள் இந்த தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதோடு மட்டுமல்லாது நாட்டின் தொலைத்தொடர்புத்துறைக்கும் பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் இதன் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.