ஐரோப்பாவில் பெரும் வரவேற்பை பெற்ற இஸ்லாமிய நிதி பரிவர்த்தனை !உலகெங்கும் வட்டியை அடிப்படையாக வைத்தே நிதித்துறை சுழல்கின்ற வேளையில் அதற்கு நேர்மாறாக இஸ்லாம் கூறும் நிதியமைப்பு லாப, நட்டங்களை மட்டுமே சார்ந்து இயங்குகிறது. இந்த இஸ்லாமிய அடிப்படையிலான நிதிப்பரிவாத்தனைகள் கிருஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஐரோப்பாவையும் வெகுவாக கவர்ந்துள்ளதுடன் லாபம் ஈட்டுவதிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.

உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய அடிப்படையிலான வட்டியில்லா நிதிப்பரிவர்த்தனை அமைப்புக்களின் சொத்துக்களின் மதிப்பு தற்போது 2 டிரில்லியன் டாலர்களாக உள்ள நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் 3.5 டிரில்லியன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 3 மில்லியன் முஸ்லீம்கள் வாழும் பிரிட்டனே மேற்குலகிற்கு இஸ்லாமிய நிதித்துறையின் ஐரோப்பிய மையமாக விளங்குகின்றது. பிரிட்டன் 2014 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 200 மில்லியன் யூரோக்கள் (சுமார் 250 மில்லியன் டாலர்) மதிப்புடைய சுகுக் (Sukuk) எனும் நிதிப்பத்திரங்களை (Islamic Bonds) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முற்றிலும் இஸ்லாமிய பொருளாதார அடிப்படையில் இயங்கும் அல் ரயான் (Al Rayan Bank) எனும் வங்கிளையும் தன்னகத்தே கொண்டுள்ளது (முன்பு இவ்வங்கி இஸ்லாமிக் பேங்க் ஆஃப் பிரிட்டன் என அழைக்கப்பட்டது)

உலகெங்கிலும் உள்ள சுமார் 622 கல்வியகங்கள் இஸ்லாமிய நிதி பற்றிய படிப்புக்களை நடத்துகின்றன, அதேபோல் 201 கல்வியகங்கள் வட்டியில்லா இஸ்லாமிய நிதிப்பாடங்களில் பட்டங்களை வழங்குகின்றன. இஸ்லாமிய பொருளாதாரத்தை நவீன உலகின் பார்வைக்கு ஏற்றவாறு பயிற்றுவிப்பதற்காகவே FinTech எனும் தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐரோப்பாவில் மட்டும் 109 கல்வியகங்கள் இஸ்லாமிய நிதி சம்பந்தமான படிப்புக்களை சொல்லித்தருகின்ற வேளையில் இதில் சுமார் 63 சதவிகித கல்வியகங்கள் இங்கிலாந்தில் மட்டும் இயங்குவது இஸ்லாமிய நிதி குறித்த ஆர்வத்தை மக்களிடம் பெருமளவில் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகியதை (Brexit Vote) அடுத்து ஏற்படும் நிதிப்பிரச்சனைகளை இஸ்லாமிய நிதிக்கொள்கைகளின் மூலம் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை காணப்படுவதுடன் அதற்கான முன்முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.