நாச்சிகுளத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் குடிநீர் மேல்நிலை தொட்டிமுத்துப்பேட்டை அருகே இடிந்த விழும் அபாய நிலையில்  குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம்  ஊராட்சி அலுவலகம் அருகே பிரமாண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி உள்ளது. பத்து லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தரமற்ற கட்டுமானத்தால் கட்டிய சில நாட்களிலே பல பகுதிகளில் உள்ள தூண்கள் மற்றும் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.  மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்த மேல்நிலை நீர்தேக்கதொட்டியை   லட்சக்கணக்கில் செலவிட்டு மீண்டும் பழுதுநீக்கம் செய்யப்பட்டது. இதுவும் பெயரளவுக்கே பணிகள் நடந்ததால் தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்த சிமெண்ட் காரைகள் பெயர்ந்து உதிர்ந்தவாறு உள்ளது.

 கிழக்கு கடற்கரை சாலை அருகே இந்த குடிநீர் தொட்டி உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் போது தொட்டி  ஆடுகிறது.  இதனால் இப்பகுதியினர்  அச்சத்தில் உள்ளனர். குடிநீரில் அரசு சுகாதார துறை பரிந்துரைக்கபட்டபடி குளோரின் பவுடரும் கலக்கப்படுவதில்லை. இந்த மேல்நிலை நீர்தேக்கதொட்டியை சீரமைத்து அல்லது இடித்து அப்புறபடுத்தி கட்டி தரவேண்டும் என்று பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர;. இதுகுறித்து அப்பகுதி வட்டார காங்கிரஸ் நிர்வாகி ஆனந்தெரட்டி கூறுகையில்:  இடிந்து விழும் நிலையில் உள்ள தொட்டி குறித்து பலமுறை அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து  சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து தள்ளவேண்டும் என்றும் கூறிவிட்டோம்.நடவடிக்கை இல்லை. இனியும் தொடர்ந்தால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.