இந்தியாவில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள்தான்: மோகன் பஹவத்தின் விஷ பேச்சால் சர்ச்சை



முஸ்லீம்கள் உள்பட இந்தியாவில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்துக்கள்தான்  என்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- முஸ்லீம்கள் உட்பட இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் இந்துதான். முஸ்லீம்கள் தேசியவாதியாக இந்துக்கள் தான். ஆனால், நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் முஸ்லீம்கள். பாரதமாதாவை மதிக்கும் ஒவ்வொரு நபரும் இந்துக்கள் தான்.

இந்தியா உலக தலைவராக வந்தால், இந்துக்கள் தான் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். ஏதாவது தவறாக நடந்தால், இந்துக்களிடம் மட்டுமே கேள்வி எழுப்பப்படும். இந்துக்களுக்கான ஒரே நாடு இந்தியா மட்டுமே. நாம் ஒற்றுமையின்றி பிறருக்கு உதவாமல் இருந்தால் சில தீய சக்திகள் ஏழைமக்களையும் கல்வி அறிவு மற்றும் சுகாதாரம் குறைந்த மக்களையும் திசை திருப்பிவிடுவர். நாட்டுக்கு எதிராக செல்வதற்கு இத்தகைய மக்களை அவர்கள் பயன்படுத்தி விடுவர். யாரும் பலவீனமாக இருப்பதை நாம் விரும்பவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.