முன்னாள் அமைச்சர் இ.அஹ்மத் மறைவிற்கு அமீரகத்தில் இரங்கல் கூட்டம்அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் இந்தியாவின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் சாஹிப் மறைவிற்கு  இரங்கல் கூட்டம் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் இ. அஹ்மத் சாஹிப் அவர்களின் மறைவிற்கு காயிஃப் ஜனாஸா தொழுகை, துஆ மஜ்லிஸ் மற்றும் இரங்கல் கூட்டம் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் அபுதாபியில்  நடைபெற்றது.

அபுதாபியில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். பேரவையின் தேசிய பொருளாளரும், நிர்வாகச் செயலாளருமான லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, மறைந்த தேசிய தலைவர் இ. அஹ்மத் அவர்களின் கட்சிப் பணி, சமுதாயப் பணி, நாட்டுப் பணி ஆகியவற்றை விவரித்து பேசி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் எம். சுஐபுத்தீன், மவ்லிது கமிட்டியின் காயல் மவ்லவி இஸ்ஹாக் லெப்பை, மர்ஹபா வெல்ஃபேர் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் லால்பேட்டை எஸ்.ஏ. ரஃபி அஹ்மத், காயல் முஹ்யித்தீன், பேரவையின் அபுதாபி மண்டல ஊடகம் மற்றும் சமூக நலத்துறைச் செயலாளர் லால்பேட்டை சல்மான் ஆகியோர் இ. அஹ்மத் சாஹிப் அவர்களின் மகத்தான சேவைகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். முன்னதாக இ. அஹ்மத் சாஹிப் அவர்களின் மஃபிரத்திற்காக திருக்குர்ஆன் ஓதப்பட்டது. பேரவையின் அபுதாபி மண்டல ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் காயல் மவ்லவி ஹுசைன் மக்கி மஹ்ழரி அவர்களால் காயிஃப் ஜனாஸா தொழுகையும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமால், அல் மனாக் நிறுவன நிர்வாக இயக்குநர் லால்பேட்டை கே.ஏ. முஹம்மது அலி, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொருளாளர் வி.ஏ. அஹ்மத் உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் ஜமாஅத்களின் நிர்வாகிகள், சமுதாய பிரமுகர்கள் திரளாக பங்கேற்று துஆச் செய்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பேரவையின் அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச் செயலாளர் கொள்ளுமேடு மவ்லவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, விழாக்குழு செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், விழாக்குழு துணைச் செயலாளர் காயல் லெப்பை தம்பி, அபுதாபி மண்டல மின்னணு ஊடகத்துறைச் செயலாளர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி நன்றி கூற, மவ்லவி ஹுசைன் மக்கி மஹ்ழரியின் துஆவுடன் நிகழ்வு நிறைவடைந்தது. அதே போன்று  துபாய் மண்டலம் சார்பில் அல் முத்தீனா,அஸ்கான் D ப்ளாகில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பேரவையின் மார்க்கத்துறைச் செயலாளர் காயல்பட்டினம் சுலைமான் மஹ்ழரி அவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தி பின்பு யாஸீன் ஓதி அன்னாரது மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து  துணைத் தலைவர் காயல்பட்டினம் நூஹ் சாஹிப் , துபை மண்டல செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி, துபாய் சுன்னத் வல்  ஜமாஅத் அமைப்பாளர் மஃரூப் காக்கா, மின்னணு ஊடகத்துறைச் செயலாளர் வடக்கு மாங்குடி முஹம்மத் சலீம்ஆகியோர் இரங்கல்  உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் மண்டல இணை அமைப்புச் செயலாளர் புளியங்குடி மவ்லவி செய்யத் அபூசாலிஹ் பிலாலி,
துணைப் பொருளாளர் காயல்பட்டினம் S.M.A. முஹம்மத் ஈசா, மண்டல சமூக நலத்துறைச் செயலாளர் பனைக்குளம் முஹம்மத் இப்ராஹிம், மண்டல பகுதி செயலாளர்கள் கீழக்கரை முஹம்மது காமில், லால்பேட்டை கிஃபாயத்துல்லாஹ், அய்யம்பேட்டை முஹம்மத் அமானுல்லாஹ், அய்யம்பேட்டை ஜா. இப்ராஹிம் அஹ்மத்   தர்வேஷ் மற்றும் மண்டல உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். மேலும் அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர்-அபுதாபி மற்றும் KMCC சார்பில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஈ. அஹமத் மறைவுக்கு இரங்கல் கூட்டம் வியாழன் 02/02/2017 இரவு நடைபெற்றது.

இஸ்லாமிக் சென்டர் தலைவர்  P. பாவா ஹாஜி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கேரளா மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகை  சார்ந்த KMCC உள்ளிட்ட சமூக நல அமைப்புகள்,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநிலத்தை சார்ந்த அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் அதன் பொருளாளர் மற்றும் நிர்வாக செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரப்பானி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.