உன் மாளிகைக்கே வந்து உன்னை அடிக்கும் வல்லமை இஸ்லாமியர்களுக்கு உண்டு : ஈரான் எச்சரிக்கைஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி, ட்ரம்ப் அரசியலுக்கு மோசமான புதுவரவாக இருக்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு.

இந்த நிலையில், டிரம்ப் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “ட்ரம்ப் இத்தனை ஆண்டுகள் வேறு உலகில் வாழ்ந்துவிட்டு இப்போது தான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஆனால், அவர் ஆபத்தான வரவாகத்தான் இருக்கிறார். டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவை தான் பாதிக்கும். மற்ற நாடுகள் நல்ல நிலையில் தான் இருக்கும். ஈரான் மக்கள் மத்தியில், அமெரிக்க அரசின் நிர்வாகம் அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளால் நேர்மையற்றதாக மாறிவிட்டது. அதனால் தான் அமெரிக்கர்களுக்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டது.” என தெரிவித்தார்.

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என ஈரான் சபதமிட்டு உள்ளது. ஈரான் வருவதற்கு அமெரிக்கர்களுக்கு விசா வழங்கப்படாது. அதையும் மீறி தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தல் விட்டுக் கொண்டே இருந்தால் உன் மாளிகைக்கே வந்து தாக்கும் வல்லமை இஸ்லாமியர்களுக்கு உண்டு என்பது கடந்த கால வரலாறு. அதிபர் புரிந்து கொள்ள வேண்டும். என்கிறார் இரான் அதிபர். ஏம்பா அமெரிக்கா எத்தனை வாட்டித் தான் ஈரான் போயி அசிங்கப்படுவே என்று வலைத்தளங்களில் கிழிக்கிறார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.