தடையைத் தடுத்த நீதிபதியின் மேல் செம கடுப்பில் இருக்கும் ட்ரம்ப்!ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு விசாத் தடை விதித்து  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட, அது பற்றி உலகமே கொந்தளிக்க, அமெரிக்கா மற்றும் உலகின் முக்கிய நாடுகளில் டிரம்புக்கெதிரான  ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என எதிர்ப்பு வலுக்க, அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்புக்கெதிராக வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட என்று கடந்த சில தினங்களாகப் பெரும் அமளி துமளிகளுக்கு மத்தியில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் வேளை, அமெரிக்க பெடரல் நீதிபதியொருவர் ''ட்ரம்பின் தடை செல்லாது'' என்று அதிரடியாக உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது வாசகர்கள் அறிந்ததே.

தடையைத் தூக்கி அப்பால் வீசியதோடு நின்று விடாமல் ''ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் இன்னொரு மதத்துக்கு எதிராகவும் செயற்படுவது அமெரிக்க அரசியற் சட்டப்படி குற்றம்'' என்றும் கூறி அந்த நீதிபதி ட்ரம்பை மிக்க தர்மசங்கடத்துக்குள் தள்ளி விட்டார். இதனால் அந்த நீதிபதி மீது செம கடுப்பில் இருக்கிறார் ட்ரம்ப்.

''நீதிபதி என்று 'சொல்லப்படுபவரின்' தீர்ப்புக்கு எதிராக நாம் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போகிறோம்!'' என்று ட்ரம்ப் தன் மீசையில் மண் ஓட்டவில்லையெனும் பாணியில் கூறியிருக்கிறார். ''அந்த நீதிபதியின் இந்தத் தீர்ப்பானது சட்ட விரோதமானவர்களையும் பயங்கரவாதிகளையும் அமெரிக்காவுக்குள் கொண்டு வந்து சேர்த்து விடும்!'' என்றும் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதிக்கெதிரான ட்ரம்பின் மோசமான விமர்சனங்களே நேற்றைய பொக்ஸ் நியூஸ், சி என் என், பி பி சி  போன்ற உலகப் புகழ் பெற்ற செய்தி நிறுவனங்களின் பிரதான செய்தியாக இருந்தது என்பது மேலதிக தகவல்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.