முத்துப்பேட்டை அருகே பரபரப்பு; ரத்த கறையுடன் நின்ற பைக்திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் ஆலங்காடு கோரையாற்று பாலம் அருகில் சாலையோரத்தில் ஒரு பைக் கேட்பாரற்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் ரத்தக்கறை படிந்து இருந்தது. தகவலின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வந்து பைக்கை கைப்பற்றினர். அந்த பஜாஜ் பிளாட்டினம் வகை பைக் சென்னை பதிவெண் கொண்டது. நேற்று நள்ளிரவு முதல் அங்கு நிற்பதும் தெரிய வந்தது. பைக்கில் ரத்தக்கறை எப்படி வந்தது. பைக்கில் வந்தவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்தார்களா, சடலத்தை வேறு எங்கோ வீசி விட்டு ரத்தக்கறை படிந்த பைக்கை மட்டும் இங்கு நிறுத்தி சென்றார்களா அல்லது திருட்டு பைக்கா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.