மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்தலைவர் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரெத்தினம், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கறீம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தில் தெகலான் பாகவி பேசியதாவது:-

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொதுமக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளது. திட்டமிடாத பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தேசத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சர்வாதிகார நடவடிக்கை மூலம் பிரதமர் மோடி நாட்டின் குடிமக்களுடைய உரிமைகள் மீது கை வைத்துள்ளார். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கான உரிமையினை மத்திய அரசு வழங்காததால் விவசாயத்தை இழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது சம்பந்தமாக பல்வேறு வாக்குறுதிகளை மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் தேர்தல் சமயத்தில் அளித்தனர். ஆனால் மீனவர்களின் நலனுக்காகவோ, கச்சத்தீவை மீட்பதற்காகவோ மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.