மும்பையை பிரிக்க நினைத்தால் வெட்டிப்புடுவேன்.. பா.ஜ.கவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கைமகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பா.ஜ.க பிரிக்க திட்டமிடுவதாக நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மும்பையை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்று ராஜ்தாக்ரே எச்சரித்துள்ளார்.


பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் மும்பையை எப்படியாவது குஜராத்துடன் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மும்பையை யாராவது பிரிக்க திட்டமிட்டால் அவர்களின் கால்களை வெட்டுவென் என்றும் ராஜ்தாக்ரே எச்சரித்துள்ளார்.

மும்பை தாதரில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, மும்பை உட்பட மாநிலத்தில தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சிகளிலம் நவநிர்மாண் சேனா கட்சி போட்டியிடும் என்றார்.

மும்பை நகரை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க பா.ஜ.க திட்டமிடுவதாக அவர் குற்றம்சாட்டினார். மும்பையை யாராவத மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்றும் ராஜ்தாக்கரே எச்சரித்தார்.

மும்பையில் அதிகளவில் பணப்புழக்கம் இருப்பதால் மும்பையை எப்படியாவது குஜராத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என குஜராத் மக்கள் கனவு காண்பதாகவும் அவர் தெரிவவித்தார். அந்தக் கனவு பலிக்காது என்றும் ராஜ்தாக்கரே கூறினார்.

இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியும் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தான். மத்தியிலும், மராட்டியத்திலும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்ற அவர்கள் முயல்வதாகவும் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.