ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வங்காள விரிகுடாவில் பாதுகாப்பு இல்லாத தீவொன்றுக்கு அனுப்ப பங்களாதேஷ் அரசு முடிவு..ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வங்காள விரிகுடாவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தீவொன்றுக்கு அனுப்ப பங்களாதேஷ் அரசு முடிவு செய்துள்ளது.

இவர்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவதற்கு முன்னர் தன்கர் சார் தீவுக்கு இடமாற்றப்படுவார்கள் என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

உயர்ந்த அலை காரணமாக பல அடிகள் நீரால் மூழ்கக் கூடிய தன்கர் சார் தீவில் பாதைகள் அல்லது உணவு வசதி எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் ரொஹிங்கியாக்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு பங்களாதேஷின் சட்டவிரோத குடியேறிகளாகவே அவர்களை அந்த நாடு நடத்துகிறது.எனினும் அவர்களை பங்களாதேஷும் வரவேற்பதில்லை.

வன்முறை காரணமாக மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினேவில் இருந்து கடந்த ஒக்டோபர் தொடக்கம் 65,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பங்களாதேஷில் சுமார் 232,000 ரொஹிங்கியா அகதிகள் உள்ளனர். இவர்கள் மோசமான வசதிகள் கொண்ட முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.