சவூதியில் வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்கள் சேகரிப்பு !சவுதி தொழிலாளர் நல அமைச்சகமும், வீட்டு வசதித்துறை அமைச்சகமும் தங்களிடமுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்களை ஒருமுகப்படுத்தவுள்ளன, அதாவது ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரின் விசா குறித்த விபரங்களுடன் அவருடைய தங்குமிடம் குறித்த விபரங்களும் ஒருமுகப்படுத்தப்படுவதன் மூலம் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ள ஊழியர்களை வெளியேற்ற முடியும் என அமைச்சரவை நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரங்களை 'ஈஜார்' (e-portal Ijar) எனும் ஆன்லைன் தளத்தில் பதிவேற்றுவதன் வழியாக அவர்களுடைய குடியிருப்பு விபரங்கள் ரெஸிடென்ஸ் விசா விபரங்களுடன் இணைக்கப்பட்டு தேவையான நேரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யவும், கட்டுப்படுத்தவும் இயலும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.