முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் OPS



அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வரும் பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


இதைத்தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

நிதி அமைச்சர் பதவி மாஃபா பண்டியராஜனுக்கு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியும் ஆட்சியும் ஓரே நபரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.