அதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு விற்பனை !தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ₹ 480 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று  வெள்ளிக்கிழமை முதல் அதிசயமாக  ₹ 400 க்கு விற்பனை செய்யப்படுகிது. விலை மலிவாக கிடைக்கும் ஆட்டு இறைச்சியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விற்பனை குறித்து காட்டுப்பள்ளி பெண்கள் மார்க்கெட் அருகே உள்ள 'நிஜாம் மட்டன் ஸ்டால்' உரிமையாளர் ராஜிக் அகமது கூறுகையில்;
வழக்கமாக புனிதமிகு ரமலான் மாதத்தில் சிறப்பு விற்பனை நடைபெறும். நேற்று  வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.400 க்கு விற்பனையை தொடங்கி உள்ளோம். எங்களது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் தினமும் விற்பனை நடத்த திட்டமிட்டுளோம்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் ஆட்டு இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகளிடமிருந்து ஆரோக்கியமான ஆடுகளை நேரடி கொள்முதல் செய்து அவற்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டுள்ளோம். ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம்.' என்றார்.
தொடர்புக்கு : 9943447195
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.