10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்தமிழகம், புதுச்சேரியில் 10ம்  வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. 9 லட்சத்து 94 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

 பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை (8ம் தேதி) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 187 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள். 10 ஆயிரத்து 972 பேர் மாணவியர்.

 தமிழகம், புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 658 மாணவ மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 738 பேர் மாணவர்கள். 26 ஆயிரத்து 920 பேர் மாணவியர். சென்னை மாவட்டத்தில் 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க முதன்மைத் தேர்வர்கள், துறை அலுவலர்கள் 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 324 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 குழுக்களாக சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.