அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 10இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்கா மாநகரின், பனீ ஹாஷிம் வீதியின் இல்லத்தில், ஒரு திங்கட்கிழமை காலையில், அரபிய மாதமான ரபீ-அல்-அவ்வல் மாதம், ஒன்பதாம் நாள், (அதற்குரிய ஆங்கில நாட்காட்டியான) கி.பி. 571, ஏப்ரல், இருபத்திரண்டாம் நாள், யானை நிகழ்வு நடந்தேறிய அதே வருடம் பிறந்தார்கள். அன்னாருடைய தாயார் அவர்கள், தான் கருவுற்றிருந்த வேளை, தனது (வயிற்று) உடற்பகுதியிலிருந்து ஒளியொன்று புறப்பட்டு, சிரிய தேசத்தின் அரண்மனை வரை சென்று ஒளிரச் செய்வது போன்ற கனவொன்றைக் கண்டார்.
அண்ணலார் (ஸல்) அவர்களின் தாயார் உடனே, அன்னாருடைய இந்த மகிழ்ச்சிகரமான பிறப்புச் செய்தியை, அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கு சொல்லி அனுப்பினார்கள். சந்தோஷப் பூரிப்புடன் வந்த அவர், அன்னாரை தன் கரங்களில் ஏந்தி, புனித கஅபா-வுக்கு எடுத்துச் சென்று, அல்லாஹ்வுக்கு நன்றி கூறி பிரார்த்தித்தார். அப்துல் முத்தலிப் அக்குழந்தைக்கு முஹம்மத் என்று பெயரிட்டார். ஆப்பெயர் அப்பொழுது. அரபியரிடத்திலே பழக்கத்தில் இருந்த பரவலான ஒரு பெயராக இருக்கவில்லை. ஆரபியர்களின் வழக்கப்படி, குழந்தை பிறந்த ஏழாவது தினத்தில் அவருக்கு விருத்தசோனம் செய்தார் அப்துல் முத்தலிப்.
அவருடைய அன்னைக்குப் பின்னர், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் பாலூட்டியவர், அவருடைய சிறிய தந்தையான அபூ லஹபின் தணைவி, துவைய்பா!
குழந்தைப்பருவம்
நகரப்பகுதிகளில் வசித்த அக்கால அரபியர்களிடத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நல்ல உடற்கட்டுடன்கூடிய ஆரோக்கியமான தேகத்தையும், நாட்டுப்புற அரபியரின் தூய பேச்சுத்திறனும், பெற்று வளர வேண்டும் என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் தூய்மையான ஆரோக்கிய மிக்க சூழல் கொண்ட பாலைப் பிரதேசப் பகுதிகளில் வளர அனுப்பி வைப்பர். ஆவ்வாறே முஹம்மத் (ஸல்) அவர்களும், ஹலீமா பின்த் அபூ துஹைப் எனும் வளர்ப்புத்தாயின் பராமரிப்பில் அனுப்பி வைக்கப்பட்டபார்கள். அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அல்-ஹாரிஸ், அனீஸா பின்த் அல்-ஹாரிஸ் மற்றும் ஜூதாமா பின்த் அல்-ஹாரிஸ் (அஷ்ஷைமா என்று அறியப்பட்டவர்) உள்ளிட்ட பல வளர்ப்பு சகொதர-சகோதரிகள் இருந்தனர்.
தாங்கள் மேற்கொண்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் காரணமாக, ஹலீமா அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் எத்தகையதொரு, நற்பாக்கியம் பெற்றார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. ஹலீமா அவர்கள் மக்கா-வுக்கு வந்தபோது பிரயாணம் செய்து வந்து கழுதை மிகவும் ஒல்லியாக, ஏறக்குறைய நோஞ்சானாக இருந்தது. ஆனால், என்ன ஆச்சர்யம், தனது சக பிரயாணிகளை முந்திச் செல்லும் வண்ணம், அத தனத பழைய வேகத்தை மீண்டெடுத்தது. அவர்கள் தமது, சொந்த இடத்துக்கு திரும்பிச் சென்று பார்க்கையில், அதிர்ஷட காற்று அங்கு விச ஆரம்பித்திருந்தது. காய்ந்து தரிசாய் அருந்த அவர்களின் நிலம், புற்கள் நிறைந்து செழிப்படைந்திருந்தது. கால்நடைகள் அவர்களிடத்தில் திரும்பி வந்தன. பெருமளவு பாலும் கறந்தன. அண்ணலார் (ஸல்) அவர்கள் இரு ஆண்டுகள் வளர்ப்புத் தாயிடம் இருந்தார்கள். பின்னர், ஹல}மா, அவரை அன்னாருடைய தாயாரிடத்தில் கொண்டு சென்றார்கள். இன்னும் சிறிது காலம் அக்குழந்தை தன்னுடன் தங்க அனுமதி கோரினார்கள். அவருடைய விருப்பப்படியெ , குழந்தை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது நாக்கு அல்லது ஐந்து வயது வரை அவர்களுடன் தங்கியிருந்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.