அதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அறிய வகை மீன் ! ( படங்கள் ) தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று இரவு மீன் பிடிக்க படகில் கடலுக்குச் சென்றார். இவரது வலையில் 10 அடி நீளமுள்ள 'சேனை பாம்பு' என அழைக்கப்படும் அறிய வகை  குழுவி மீன் சிக்கியது. சுமார் 7 கிலோ எடை கொண்ட இந்த மீனை அதிராம்பட்டினம், கடைத்தெரு பெரிய மார்க்கெட்டில் காட்சிக்கு கொண்டுவந்தனர். இந்த அறிய வகை மீனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி முகைதீன் கூறுகையில்;
'மீன் இனத்தை சேர்ந்தது. கடலில் வாழக்கூடியது. மருத்துவ குணமுடையது. உடலில் உஷ்னத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இடுப்பு வலியை போக்கும். பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்' என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.