அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 11



ஒரு நாள்..! வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அன்னாரிடத்தில் வரகை தந்து அவரடைய நெஞ்சைப் பிளந்து, இருதயத்தை வெளியிலெடுத்து, அதனில் இருந்த ஒரு இரத்தக்கட்டியை தனிப்படுத்திவிட்டுக் கூறினார்கள்: இது ஷைத்தானுடைய பகுதியாக இதில் இருந்தது’. பின்னர், அதனை ஒரு தங்கப் பாத்திரத்தில் இட்டு ஜம்ஜம் நீரினால் கழுவினார்கள். பின்னர், இருதயப் பகுதிகள் இரண்டம் இணைத்து மீண்டும் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டது. சிறுவர்களும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் விளையாட்டுத் தோழர்களும், ஹலீமா-விடம் ஓமோடி வந்து முஹம்மத் கொலை செய்யப்பட்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.அனைவரும் அவரை நோக்கி ஓடினார்கள். அவரை நலமுடன் இருக்கக் கண்டார்கள். அன்னாருடைய முகம் மட்டும் வெண்மை படர்ந்து காணப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அந்தக் குழந்தை குறித்து, ஹலீமா அவர்களைக் கவலை பீடித்துக்கொண்டது. எனவே, அவர், குழந்தையை அதனுடைய தாயிடத்திலேயே விட்டுவிட்டார்கள். அக்குழந்தை தனத ஆறாம் வயது வரை, தன் தாயுடனே வளர்ந்தது.
மறைந்த தனது கணவரின் நினைவாக, ஆமீனா அவர்கள், அவருடைய அடக்கஸ்தலத்தை தரிசிக்க யத்ரிப் (மதீனா) சென்றார். ஐநூறு கி.மீ. தொலைவு கொண்ட இந்த பிரயாணத்தை தனது அநாதைக் குழந்தை, பணிப்பெண் உம்மு ஐமன் மற்றும் மாமனார் அப்துல் முத்தலிப் ஆகியோருடன் மேற்கொண்டார் ஆமீனா! ஒரு மாதம் வரை அங்கு கழித்து மக்கா திரும்பும் வழியில் கடும் நோய்வாய்ப்பட்டார்கள். மக்கா மற்றும் மதீனாவுக்கு இடைப்பட்ட சாலைப்பகுதியில் அப்வா எனும் இடத்தில் காலமானார்கள்.
கருணையுள்ளம் கொண்ட தன் பாட்டனாருக்கு..!
அப்துல் முத்தலிப் தனது பேரனை மக்காவுக்கு திரும்ப அழைத்து வந்தார். அநாதையாகி நிற்கும் தனது பேரனுக்கு ஏற்பட்ட (தாயாரின் மறைவு எனும்) கடுந்துயரம், கடந்த காலங்களில் இந்த சிறுவன் கண்ட துன்பங்களைவிடவும் மிகவும் கொடியது என்பதை உணர்ந்திருந்தார். அதனால், அவர்பால், அப்துல் முத்தலிப் அவர்கள் மென்மையான இதயம் கொண்டவராக இருந்தார். தனக்குப் பிறந்த குழந்தைகளைவிடவும் சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அளவிட முடியாத இரக்கம் கொண்டிருந்தார். எந்த நிலையிலும் தான் ஒரு அநாதை என்பதை அந்த சிறுவன் உணர்ந்துவிடக் கூடாது என்பதில் அதீத அக்கறை கொண்டிருந்தார். தன் சொந்த பிள்ளைகளைவிடவும் அவர் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தார். கஅபா-வின் நிழலில், அப்துல் முத்தலிப் அவர்களுக்காக விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டிருக்கும். தமது தந்தைக்கு கண்ணியம் அளிக்கும் வண்ணம், அவருடைய பிள்ளைகள் அந்த விர்ப்பைச் சுற்றி அமர்வார்கள். ஆனால், அந்தவேளை, சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய இருப்பிடமோ, அந்த விரிப்பாக இருக்கும். அவருடைய சிறிய தந்தையர் சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களை, அந்த விரிப்பிலிருந்து அப்புறப்படுத்துவார்கள். ஆனால், அவ்வேளை அப்துல் முத்தலிப் அங்கு இருந்தால், ‘எனது பெரனை விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த சிறுவன் குறிப்பிடத்தக்க மதிப்பைப் பெறுவான்’. தனது பேரனை அந்த விரிப்பில் மீண்டும் அமர்த்துவார். அவனுடைய பின்புறத்தில் அன்பாகத் தட்டிக்கொடுப்பார். சிறுவனின் இத்தகைய செய்கையால், எப்போதும் மகிழ்ந்தவராக இருப்பார் அப்துல் முத்தலிப்!
அந்தோ! ஆந்த சிறுவனின் வாழ்வில் மீண்டும் ஒரு துயரம். சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எட்டு வயது நிரம்பியபோது, மக்காவில் அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அகால மரணம் அடைந்தார். இப்போது, முஹம்மத் (ஸல்) அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு, அன்னாருடைய சிறிய தந்தையும், தந்தையும் சகோதரருமான அப்துல் முத்தலிப்அவர்களை வந்தடைந்தது.
தனது சகோதரர் மகனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அபூ தாலிப், மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றினார். தனது சொந்த குழந்தைகளுக்கு இடையே, அவரை தனக்கு மிக்க விருப்பமானவராக முன்வைத்தார். மதிப்பும் மரியாதையும் கொண்ட தனித்த மனிதராக அந்த சிறுவனை அடையாளப்படுத்தினார். ஓன்றல்ல.., இரண்டல்ல.,! நாற்பது ஆண்டுகள் வரை, அபூ தாலிப் அவர்கள் தனது சகோதரர் மகனாகிய அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்பால் அன்பும் ஆதரவும் கொண்டு அவரைப் பராமரித்தார். அனைத்து வகைகளிலும் அவருக்கு ஆதரவு நல்கி அவரைப் பாதுகாத்தார். எந்த அளவுக்கெனில், ஏனைய மக்களுடனான அவருடைய உறவு, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அந்த மக்கள் கொண்டிருந்த நடத்தையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றால்.., பார்த்துக் கொள்ளுங்கள், எமது நாயகம் (ஸல்) அவர்கள் மீது அபூ தாலிப் கொண்டிருந்த அன்பை..!

இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.