மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் மோடியின் திறமையாள் 118-வது இடத்தில் இந்தியா..!



மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு கடந்த 2016-ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐநா வெளியிட்டுள்ளது.

155 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியா 10 இடங்கள் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் பின்லாந்து ஆகியவை முறையே முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்கா 13-வது இடத்திலும் ஆஸ்திரேலியா 9-வது இடத்திலும் இஸ்ரேல் 11-வது இடத்திலும் உள்ளது.

பஞ்சத்தால் பட்டினிச்சாவு அரங்கேறிவரும் சோமாலியா 76-வது இடத்தில் உள்ளது. சோமாலியாவைவிட இந்தியா 42 இடங்கள் பின் தங்கியுள்ளது.

அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் காட்டிலும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.