அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 14அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை

கதீஜா பிராட்டியாருடன் காவிய மணவாழ்க்கை

கதீஜா பிராட்டியாருடன் காவிய மணவாழ்க்கை
கதீஜா பிராட்டியாருடன் காவிய மணவாழ்க்கை
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு திரும்பிய பின்னர் கதீஜா பிராட்டியார் ஒரு உண்மையைக் கண்டார்கள். தனது வணிகத்திலும், இலாபத்திலும் வழமைக்கு மாறாக அதிகமான அபிவிருத்தியும், ஆசியும் நிரமபியிருப்பதை உணர்ந்தார்கள். அவருடைய பணியாளரும், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் நல்ல நடத்தை, நேர்மை, வாய்மை, தொலைநோக்கு சிந்தனை மற்றும் நம்பிக்கை குறித்து அம்மையாரிடம் சிலாகித்துப் புகழந்தார்கள். இருமுறை விவாக விலக்கு பெற்ற அம்மையார் அவர்கள், குறைஷியரின் பெருந்தலைவர்களிடமிருந்தெல்லாம், திருமணத் தூதை பெற்று வந்தார்கள். இருப்பினும், அவற்றையெல்லாம் அம்மையார் அவர்கள் நிராகரித்தே வந்திருக்கின்றார்கள்.
தற்போது அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஆளுமைப் பண்புகள் குறித்து தனது பணியாளர் மைசறா-வின் பாராட்டுப் பத்திரம், கதீஜா பிராட்டியாரை சிந்திக்க வைத்தது. தனது விருப்பத்தை, தன் தோழியான நஃபீஸா என்பாரிடம் வெளிப்படுத்தினார் கதீஜா அவர்கள்.அவருடைய தோழியும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உடனே சென்று, இந்த நற்செய்தியை தெரிவித்தார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களும் தமது சம்மதத்தை தெரிவித்ததுடன், இது குறித்து கதீஜா அம்மையாரின் தந்தை சகோதரரிடம் இதுகுறித்து பேசுமாறு தமது தந்தையின் சகோதரர்களிடம் கூறினார்கள். இதன் பின்னர், அவர்கள் இருவரும் வாழ்க்கை மண ஒப்பந்தத்தில் இணைந்தனர். இந்த மண ஒப்பந்தத்தில் பனீ ஹாஷிம் அவர்கள் சாட்சியாக இருந்தார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) தமது திருமணத்துக்கு இருபது ஒட்டகங்களை தட்சணையாக அம்மையாருக்கு வழங்கினார்கள். இந்த மணக்காலத்தின்போது அம்மையார் கதீஜா அவர்களுக்கு நாற்பது வயது. மேலும். அவருடைய காலத்தில் கதீஜா பிராட்டியார் அவர்கள் மிகச் சிறந்த பெண்மணியாகவும், சிறந்த குலப்பெருமையும், அறிவுஞானமும் மிக்கவராகலும் விளங்கினார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மணமடித்த முதல் பெண்மணி ஆவார்கள் அன்னை கதீஜா அவர்கள்..! அன்னை கதீஜா-வின் மரணம் வரை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் வேறெந்த பெண்ணையும் மணமுடிக்கவில்லை.
மேலும், அண்ணலார் (ஸல்) அவர்களின் புதல்வரான, இப்ராஹீம் அவர்களைத் தவிர்த்து, அல்-காஸிம், ஜைனப், ருகைய்யா, ஃபாத்திமா மற்றும் அப்துல்லாஹ் ஆகிய, அன்னாருடைய மற்ற புதல்வர்-புதல்வியர் அனைவரையும் பெற்றெடுத்த பெருமை அன்னையையே சாரும். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய புதல்வர்கள் அனைவரும் தத்தமது குழந்தைப் பருவத்திலேயே மரணித்துவிட, புதல்வியரில் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களைத் தவிர அனைவரும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே மரணித்துவிட்டார்கள். அன்னை ஃபாத்திமா (ரலி) மட்டும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவுக்கு ஆறு மாதங்கள் பின்னர் காலமானார். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய புதல்வியர் அனைவரும் இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியதோடு அல்லாமல், மதீனா நகருக்கு ஹிஜ்ரத் – புலம் பெயர்ந்தார்கள்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.