கஸ்டடி மரணம்: இரண்டு நாட்களாக சிறையில் அழுதபடியே இருந்த 16 வயது ஜியாவுத்தீன்உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயதான ஜியாவுத்தீன் ராசா. அப்பகுதியில் உள்ள 15 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி காணாமல் போனதற்கு அப்பெண்னின் தந்தை காவல் நிலையத்தில் வாய்மொழி புகாரளித்துள்ளார், மேலும் தனது பெண் காணாமல் போனதற்கு காரணம் ஜியாவுதீன் தான் என்றும் அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 9 மணியளவில் காவல்துறையினர் தனது மகனை கடோரடல் சவுக் புகுதிக்கு இது தொடர்பாக விசாரிக்க அழைத்ததாக ஜியவுதீனின் தந்தை முஹம்மத் யமீன்  தெரிவித்துள்ளார். காவலர் ஷங்கர் டம்டா ஜியாவுதீனின் தந்தையிடத்தில் , காணமால் போன பெண்ணின் அலைபேசியில் இருந்து ஜியாவுதீனுக்கு அழைப்பு வந்துள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் அச்சமுற்ற ஜியாவுதீன் குடும்பத்தினர் ஜியாவுதீனை காவல்நிலையம் அழைத்து சென்றால் அவர் மேல் உள்ள களங்கத்தை சரி செய்யலாம் என்று எண்ணி காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஜியாவுதீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்தில் நடந்தவை பற்றி யமீன் கூறுகையில், “அவனை நங்கள் பிப்ரவரி 27 ஆம் தேதி சந்திக்கையில் கடுமையாக தாக்கப்பட்டிருந்தான். அங்கிருந்த பெயர் தெரியாத காவலர்கள் எங்களையும் கைது செய்துவிடுவதாக மிரட்டினர். அந்த நேரத்தில் அப்பெண்ணின் தந்தையும் அங்கு இருந்தார். அவர் மீண்டும் மீண்டும் அவரது மகள் இருக்கும் இடம் ஜியாவுதீனுக்கு தெரியும் என்று கூறிக்கொண்டிருந்தார்.” என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் காவல் நிலையத்தில் இருந்த நேரத்தில் அந்த பெண் தனது தந்தையை தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவர் நலமாக இருப்பதாகவும் இதில் ஜியாவுதீனுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். அது அப்பெண்ணின் தந்தை மேலும் ஆத்திரமுறச் செய்துள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி தனது மருமகனை காவல்துறையினர் தாக்குவதை தான் கண்டதாக ஜியாவுதீனின் மாமா முஹம்மத் சலீம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக ஜியவுதீனின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று ஜியவுதீனுக்கு உணவு எடுத்துச் சென்று வந்துள்ளனர். மேலும் அவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவனை விட்டுவிடும்படியும் காவல் துறையினரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் மூன்றாம் நாள் ஜியாவுதீன் பெயரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடந்து சில மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜியாவுதீனின் குடும்பத்திற்கு அரசு மருத்துவமனையில் இருந்து L.D.பட் தொலைபேசியில் அழைத்து ஜியவுதீனின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது ஜியாவுதீன் அணிந்திருந்த காலணிகள் மற்றும் சட்டை இருக்கவில்லை. அவற்றை பின்னர் காவல் நிலையத்தில் இருந்து அவர்கள் பெற்றுள்ளனர். ஆனால் ஜியாவுதீனின் தொலைபேசியை காணவில்லை என்று அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான்கு காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன பெண்ணின் குடும்பம் தற்போது தலைமறைவாக உள்ளது. தற்போது இது தொடர்பாக எந்த ஒரு கைதும் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

காவலர் பல்வந்த் சிங், காவல்துறை துணை ஆய்வாளர் பிரவீன் சிங், மற்றும் அடையாளம் தெரியாத காவலர்கள் மீது கொலை வழக்கு, சட்ட விரோத காவல், மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஷிபூர் காவல்நிலை காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் மெஹ்ரா உட்பட இரண்டு காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விசாரணையை செய்து வரும் காவல்துறை ஆய்வாளர் விபின் சந்திர பண்ட், “தற்போது ஆதாரங்களை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது அந்த சிறுவன் உண்மையிலேயே மூன்று நாட்கள் காவல்துறையில் கஸ்டடியில் வைக்கப்பட்டானா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அந்த சிறுவனை காவல் நிலையம் வர கூறி மிரட்டும் ஆடியோ ஒன்றும் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.