அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 18தூதுத்துவ நிழலில் தூய பயணம்

ஹிரா குகையில்..!

தூதுத்துவ நிழலில் தூய பயணம்
தூதுத்துவ நிழலில் தூய பயணம்
அவருக்கு அப்போது வயது நாற்பது. அந்த வயதில், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்காவில் அமைந்த அந்-நூர் மலையின், ஹிரா குi உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பெரும்பாலான நேரங்களை, குறிப்பாக ரமளான் மாதத்தை அங்கு கழித்தார். ஏகஇறைவன் ஒருவனை மட்டுமே வணங்குவதிலும், தியானத்திலும் ஈடுபட்டார். தனது சமூகத்தாரிடையே மலிந்து கிடக்கும் தீயொழுக்கங்கள் மற்றும் சிலைவணக்க வழிபாடு குறித்து கவலை அடைந்தவராக.., அமைதியற்றவராகக் காணப்பட்டார்.

வானவர் தலைவர் கொணரந்த வான்தூது!

பூரணத்துவ வயதாகக் கணிக்கப்படும் நாற்பதாவது வயதை அடைந்தபோது, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இறைத்தூதுத்துவ அடையாளங்கள் தென்பட ஆரம்பித்தன. பொதுவாக இந்த வயதில்தான், இறைத்தூதர்கள் அனைவரும், தாம் கொணர்ந்த செய்தியை வெளிப்படுத்துமாறு ஏகஇறைவனால் பணிக்கப்பட்டார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏறக்குறைய ஆற மாதங்கள் வரை அனுபவிக்கக்கூடிய ஒரு உண்மை குறிக்கோள்களாக இருந்தன அந்த அடையாளங்கள்! ஆரம்பத்தில் கனவுகளின் வெளிப்பாடாக இருந்து, அதிகாலையின் தெளிவான விடியலைப் போன்று விடிந்த, இந்த உண்மை இலட்சியப் பயணம், இறைத்தூதுத்துவத்தின் நாற்பத்து ஆறில் ஒரு பங்காக பரிணமித்தது. இதன் தொடர்ச்சியில், அது ரமளான் மாத்தில்.., தனது ஹிரா குகையில் தனது வழக்கமான தஞ்சமடைதலின் மூன்றாம் ஆண்டில்.., அல்லாஹ்வின் பேரருள் இந்த பூமியின் மீது படர எத்தனித்தது.

ஆம்..!

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் எனும் மதிப்புடன் கவுரவிக்கப்பட்டார்கள். வேத வெளிப்பாட்டின் உன்னத ஒளி திருக் குர்ஆனின் சில வசனங்களாக.., அந்த மனிதப் புனிதர் மீது படர ஆரம்பித்தது.

அந்த நாளின், சரியான காலத்தை மிக ஆழமாக சென்று கணக்கிட நாடினால், திங்கட்கிழமை, ரமளான் 12-ஆம் நாள் எனவும் அது கி.பி. 610, ஆகஸ்ட் 10 எனவும் தோராயமாகக் கணிக்க முடியும்.

விளக்கமாகக் கூறினால், சத்தியம் (ஜிப்ரீல் (அலை) அவரிடத்தில் தோன்றி, ‘ஓதுவீராக!’ என்றபோது, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மறுமொழிந்தார்கள்: ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே.,!’

அந்த வானவர், அவர் சிரமப்படும் அளவுக்கு அவரை இறுகக் கட்டிக் கொண்டார். பின்னர் அவரை விடுவித்து மீண்டும் கூறினார்: ‘ஓதுவீராக!’ ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே.,!’ என அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்.

வானவர் மீண்டும் அவரை கட்டிக் கொண்டு, அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலாத அளவுக்கு மிக அழுத்தமாக இறுக்கினார். அவரை விடுவித்த பின்னர் மீண்டும் கூறினார்: ‘ஓதுவீராக!’ அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே..!’ என்றார் மீண்டும்..!

அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலாத அளவுக்கு மூன்றாம் முறையாக மீண்டும், மிக அழுத்தமாக இறுக்கினார். பின்னர் அவரை விடுவித்து கூறினார்:-

ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் மாபெரும் அருட்கொடையாளன் (திருக் குர்ஆன் 96:1-3)

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் திடுக்கிட்டார்கள். அச்சத்தால் நடுங்கினார்கள். தனது துணைவியாரான அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ‘என்னைப் பொர்த்துங்கள்.,! என்னைப் போர்த்துங்கள்..!!’ என்றார்கள்.,!இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், குகையில் நடந்த சம்பவத்தை தனது துணைவியிடம் கூறினார்கள். அன்னை கதீஜா கூறினார்கள்: ‘அல்லாஹ் உங்களை கைவிடமாட்டான்.உங்கள் குடம்பத்தாருடன் நீங்கள் நல்ல முறையில் பழகுகின்றீர். பலவீனமானவர்களின் சுமைகளை சுமக்கின்றீர். வறியோருக்கும், தேவையுடையோருக்கும் உதவுகின்றீர்.விருந்தினரை உபசரிக்கின்றீர். உண்மையின் பாதையில் கடுமையாக உழைக்கின்றீர!’

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.