அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! –19பின்னர், கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை தனது சிறிய தந்தையின் மகனாரிடம் அழைத்துச் சென்றார். வரகா பின் நவ்ஃபல் என்ற அந்தப் பெரியவர் பார்வை இழந்தவர், முதமை தட்டியவர்.அஞ்ஞானக் காலத்தில் கிறித்துவத்தை ஏற்று, பைபிள் வேத நூலை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு நடந்தவற்றை அவரிடம் விளக்கினார்கள். வரகா பதிலளித்தார்: ‘(உம்மிடம் வந்த) அவர் மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட நமூஸ் (வேத வெளிப்பாட்டின் உண்மைகளை குறித்து அறிந்தவர்) ஆவார். அந்தோ! நான் இளைஞனாக இருந்திருக்கக்கூடாதா..? உமது மண்ணை விட்டும், உம் சமூகத்தார் உம்மை வெளியேற்றும் தருணம் வரை நான் உயிருடன் இருந்திருக்க வேண்டுமே..!’

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் வினவினார்கள்: ‘என்ன, என்னை அவர்கள் வெளியேற்றுவார்களா..?’

‘நீர் கொண்டு வந்ததைப் போன்ற செய்தியைக் கொணர்ந்த ஒவ்வொருவரும், இதுபோன்ற விரோதப் போக்குடன்தான் நடத்தப்பட்டார்கள். அந்த நாள் வரும் வரை நான் உயிருடன் இருந்தால், நிச்சயமாக உம்மை மிகத் திடமாக ஆதரிப்பேன்’ என்று உறுதியுடன் உரைத்தார் வரகா! சுpல நாட்களில் வரகா காலமாகிவிட்டார்.

வஹீ எனும் இறைசெய்தி சிறிது காலம் நின்றுபோனது. அதனால் அண்ணலார் முஹம்மத் (ஸல்) மிகவும் கவலையடைந்தார்கள். மனவருத்தப்பட்டு, பதற்றத்தால் மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம், அவர் முன்பாக வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி ‘முஹம்மதே! திண்ணமாக நீர் இறைத்தூதராவீர்! ‘ என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹீ எனும் இறைசெய்தி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் தலைப்படுவார்கள். மீண்டும் அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.

வஹீ எனும் இறைசெய்தி அனுப்பப்படுவதில், சிறிது நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதற்குக் காரணம் இதுவே: அதாவது, அதன் தாக்கத்தால், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுபவித்த ஒருவித அச்சத்தைப் போக்கவும், அன்னாரை ஒரு நீண்டகால இறைவெளிப்பாட்டின் தாக்கத்துக்கு அவரை தயார்படுத்தவும்தான்..!

இறைசெய்தி அனுப்பப்படுவதில் ஏற்பட்ட தற்காலிக தாமதம் குறித்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்: ‘ நான் நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது வானத்திலிருந்து ஒரு அசீரிரி செவியுற்றேன்.மேலே அன்னாந்து பார்த்தேன். ஹிரா குகையில் என்னிடத்தில் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வெளியில் ஒரு நாற்காலியின் மீது அமர்ந்நிருக்கக் கண்டேன். அவரைக் குறித்துநான் மிகவும் அச்சம் nகொண்டிருந்த காரணத்தினால், நிலத்தில் மண்டியிட்டேன். பின்ர் வீட்டுக் சென்று  ‘என்னைப் போர்த்துங்கள்..! என்னைப் போர்த்துங்கள்..!!’ என்று நடுங்கினேன். ஆப்போது என் இறைவன் இந்த வசனத்தை இறக்கினான்:-

போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக! மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக! (திருக் குர்ஆன் 74:1-5)

இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர், அண்ணலார் முஹம்மத் (ஸல்) இரு முக்கிய பணிகளுடன், அல்லாஹ்வின் தூதராக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

முதல் பணி, தயாராகுதல் மற்றும் எச்சிக்கை விடுத்தல்! எல்லாம் வல்ல அல்லாஹ்-வைக் குறித்து தனது மக்களுக்கு அறிவுரை பகருவதும், அவர்தம் பாவச் செயல்களின் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்தல்!

இரண்டாவது பணி, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் மற்றும் மற்றவர்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியாகத் திகழ்தல்!

மேற்சொன்ன இறைவசனத்தில் உள்ள மூன்றாவது வசனத்தில் ‘ஃபகப்பிர்’ எனும் சொல்லாடல் இவ்வாறு பொருள்படுகின்றது: அல்லாஹ் ஒருவனை மட்டுடே வணங்க வேண்டும், அவனுக்கு வேறு எவரையும்-எதனையும் இணையாக்கக் கூடவே கூடாது.

நான்காவதாக உள்ள ‘தியாபக ஃபதஹ்ஹிர்’ எனும் வசனம் மொழிரீதியாக இவ்வாறு பொருள்படும்: உமது ஆடைகளையும் நடத்தையையும் தூய்மைப்படுத்துவீராக!’

அடுத்த இறைவசனம், ‘வர்ருஜ்ஸா’ – அரபியர்களின் அஞ்ஞான பழக்கங்களிலிருந்து  விலகியிருக் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை தூண்டுகின்றது.

இதற்குப் பின்னர், இறைவசனம் மிக ஆணித்தரமாகவும், அடிக்கடியும், வழமையாகவும் இறங்க ஆரம்பித்தது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.