சுவனத்தின் இன்பங்கள் – 1சுவனத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி
சுவனத்தின் இன்பங்கள்
சுவனத்தின் இன்பங்கள்
எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான்.மேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய  சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது. அது மறுமை வாழ்வுக்காக இறைவனால் தயார் படுத்தப்பட்டிருக்கின்றது என்றும், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அவர்களுக்கு உண்டு என்ற தகவலையும் சொல்கிறது.

மேலும் அது அனைத்து வகையான அருட்கொடைகளும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஆன்மாக்கள்/இதயங்கள் விரும்பக்கூடிய அனைத்தும் கிடைக்கும் என்றும் அவர்களின் இதயங்களில் இருந்து கோபதாபங்கள், கவலைகள், மன வருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றும் சொல்கிறது. இறைவன் இதுபோன்ற ஒரு அருட்கொடையை உண்டாக்கி, மறுமை நாளில் தான் விரும்பக் கூடியவர்களுக்கு அளிப்பதற்காக தயாரித்து வைத்துள்ளான்.

சொர்க்கத்தின் மட்டற்ற மகிழ்ச்சி என்பது என்ன?  அது எவ்வாறு இந்த உலக மகிழ்ச்சியில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி ஒரு சில உதாரணங்ளோடு பார்ப்போம்.


வேதனை, துன்பம் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சி: –

மனிதர்கள் இந்த உலகத்தில் சந்தோஷம் அடைகின்ற அதே நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் வேதனையையும் அடைகின்றனர். ஒருவரின் இந்த உலக வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அடைந்த சுகத்தை விட அடைந்த கஷ்டங்களின் அளவு கூடுதலாகத் தான் இருக்கும். ஆனால் மறுமை வாழ்க்கையைப் பொறுத்த வரையில் முழுமையான மகிழ்ச்சி, சந்தோஷத்தை தவிர கஷ்டங்களையோ, துன்பங்களையோ சிறிதும் அனுபவிக்க மாட்டார்கள். அனைத்து வகையான வேதனை, துன்பங்களும் மறு உலகத்தில் இல்லாமல் போய் விடும். இது சம்பந்தமாக ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

சொத்து சுகங்கள்: –

மனிதன் தான் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு, அடிப்படை தேவையான பணம், ஆபரணங்கள், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடைகள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை மாய வித்தைகள் செய்தாவது அடைய முயற்சிக்கிறான். மேலும் அதுதான் வாழ்க்கையின் வெற்றி என்றும், நினைக்கிறான். அதிகமான மக்களுக்கு வெற்றி என்பது சொத்து சுகங்களோடு சம்பந்தபட்டது என்று நினைக்கின்றனர். அது உண்மைக்கு புறமானதாக இருந்த போதிலும் மிகப்பெறும் செல்வந்தர்கள், எவ்வளவு துக்ககரமான வாழ்க்கையை கடைபிடித்துள்ளார்கள் என்று நாம் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். சில சமயம் அது அவர்களை தற்கொலையின் பக்கம் கூட இட்டுச் செல்கிறது. சொத்து என்பது, என்ன விலை கொடுத்தாவது அடையக்கூடிய, மனிதனின் இயற்கையான வேட்கை ஆகும். இந்த விருப்பம் பூர்த்தி அடையாத போது மனிதனை துன்பமடைய செய்கிறது. இந்த காரணத்தினால் தான் இறைவன் சொர்க்க வாசிகள், அவர்கள் கற்பனை செய்த அனைத்து வகையான சொத்து சுகங்களையும் பெறுவார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.