குஜராத்தில் மாணவர்களிடையேயான தகராறு மத மோதலானது: 2 பேர் பலி- 50 வீடுகள் தீக்கிரை!குஜராத்தில் மாணவர்களிடையேயான தகராறு மத மோதலாக வெடித்தது. இம்மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மத மோதலாக வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 50 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
பதான் மாவட்டத்தில் வடவள்ளி கிராமத்தில், 10-ஆம் வகுப்பு தேர்வை முன்னிட்டு பள்ளிக்கூடத்தின் படிக்கட்டுகளில் இரு மாணவர்கள் ஏறிய போது ஒருவர் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் இரு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சிறிய விவகாரம் சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்தது. இதில் 50 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன.

தகவலறிந்த பதான் மற்றும் மெஹ்சானா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.