நடுகடலில் படகு கவிழந்தது..! 200 அகதிகள் பரிதாபமாக பலி!



உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக  நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்  ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர்.

சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் அகதிகள் படகுகளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களது படகு மத்திய தரைக்கடலில் லிபியா அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அகதிகள் வந்த 2 படகுகள் கடலில் மூழ்கியது.

அந்த படகுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். மூழ்கிய படகுகளில் இருந்து 5 பேரை பிணமாக மீட்டனர்.

மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொதுவாக லிபியாவில் இருந்து இத்தாலி வழியாக அகதிகள் புறப்பட்டு வருகின்றனர்.

ஆனால் துருக்கி மற்றும் கிரீஸ் இடையே வரும் போது கடல் சீற்றத்தால் தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் அகதிகள் புறப்பட்டு வந்ததாகவும் அவர்களில் 559 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.