2007 அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் விடுவிப்பு2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அஜ்மீர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான வலதுசாரி இந்து பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுவாமி அசீமானந் நேற்று அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை அவ்வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றம் மற்ற மூன்று பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் சுவாமி அசீமானத்தை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விடுவிப்பதாக நீதிபதி தினேஷ் குப்தா கூறியுள்ளார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரான தேவேந்திர குப்தா, பாவேஷ் படேல் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் மீது IPC (120B, 295-A) ஆகிய வெடிகுண்டு பிரிவு, வெடிகுண்டு தாக்குதலுக்கான UAPA பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இவர்களுக்கான தண்டனை வருகிற மார்ச் மாதம் 16 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டவர்களில் ஹர்ஷத் சோலங்கி, லோகேஷ் ஷர்மா, மெஹுல் குமார், முகேஷ் வசாணி, பார்த் பாய் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அடங்குவர். இதில் சந்திரசேகர் பிணையில் வெளிவந்தவர். மற்றவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

சுவாமி அசீமானந் குற்றம் சாட்டப்பட்ட 2007 பிப்ரவரி 18 நடைபெற்ற சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர். ஹைதிராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்த் 2010 டிசம்பரில் இருந்து சிறையில் உள்ளார்.

இவரை 14 பேர் கொல்லப்பட்ட மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று 2010 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சிபிஐ ஹரித்வாரில் வைத்து கைது செய்தது.

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் படையிடம் வழங்கப்பட்டு பின்னர் தேசிய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் NIA இவ்வழக்கை 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி புது டில்லி NIA காவல் நிலையத்தில் மறு பதிவு செய்தது. தேசிய புலனாய்வுத்துறை அமைப்பை பொறுத்தவரை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே, ராமச்சந்திரா மற்றும் சுரேஷ் நாயர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இவ்வழக்கில் ஏறத்தாழ 149 சாட்சிகளும், 451 ஆவணங்களும் ஆராயப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் NIA மூன்று கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.