திருவாரூர் மாவட்டத்தில் 24, 25ம் தேதிகளில் குடிநீர் சப்ளை ரத்து !கொள்ளிடம் - வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாராமரிப்பு பணி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (24ம் தேதி), நாளை மறுதினம் (25ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளை (24ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் (25ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சிகள், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும்  வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டுர், முத்துப்பேட்டை  மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. இது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ளுமாறு திருவாரூர்  குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

Thanks : தினகரன்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.