அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 24வெற்றிப் பாதையில் பயணிக்கும் வீரிய மார்க்கத்தை நசுக்க வீரமற்ற முயற்சிகள்..!


அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு
தனது அழைப்புப்பணியிலிருந்து சிறிதும் பின்வாங்க மாட்டார் இவர் என்பமை குiஷியர் உணர்ந்துகொண்டார்கள். எனவே, அலையாய் வீறுகொண்டு வரும்.., எஃகுபோல் திடமாய் நிற்கும் அவருடைய அழைப்பை கட்டுக்குள் வைக்க நாடினர். அதற்காக, அநாகரிகமான, பண்பற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்:-

1. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களையும், அவரைப் பின்பற்றுவோரையும் கேலும் கிண்டலும் செய்தனர். அவர்களை சிறுமைப்படுத்தவும், தூற்றவும் தயங்கவில்லை. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஜின் பிடித்துவிட்டது என்றும் அல்லது அவர் புத்திசுவாதீனமற்றவர் என்றும் அல்லது அவர் மாந்தீரீகத்தை மேற்கொள்ளும் ஒரு பொய்யர் என்றும் தூற்றினர்.
2. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை திசைதிருப்பினர். அவற்றுக்கு இருபொருள்கள் கற்பித்தனர். பொய்-புரட்டுக்களை பரப்பினர்.
3. வீண் விவாதங்கள் மற்றும் சிலேடையான அணுகுமுறை: ஏகத்துவம், இறுதித் தீர்ப்புநாளில் உயிர்த்தெழுப்படுதல் உள்ளிட்ட இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் வீணான விவாதங்களை முன்வைத்தனர்.
4. உருவவழிபாட்டுக்காரர்களான இந்த இணைவைப்பாளர்கள், தங்களது கடவுளரை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு வருடமும், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைவனை இணைவைப்பாளர்கள் ஒரு வருடமும் வழிபட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர். அதனைவிடவும் கீழிறங்கி, ஒரு கட்டத்தில், தாங்கள் வழிபடுவதை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களும் – அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் வழிபடும் இறைவனை தாங்களும் வழிபட வேண்டும் என்றும் கோரினர்.அதன் மூலதம் இருதரப்பாரும் ஒரு பொதுவான முடிவுக்கு வரமுடியும் என கூறினர்.
இணைவைப்பாளர்களின் இந்த முட்டள்தனமான கோரிக்கைக்கு, வல்ல அல்லாஹ் உடனே சரியான சவுக்கடியைக் கொடுத்தான், இந்த திருக் குர்ஆன் வசனங்கள் மூலமாக:
கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். 109:1-6

அடக்குமுறைகள்

இஸ்லாத்தின் வீரஎழுச்சிக்கு முட்டுக்கட்டையிட தாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போனதை உணர்ந்தனர் இணைவைப்பாளர்கள்.! ஆதலால், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களைத் துன்புறுத்தவும், அங்களின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி அவரைப் பின்பற்றியவர்களை பலவழிகளில், சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கவும் தலைப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.