அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 25சுயம் அபூலஹப் – இந்த துன்புறுத்தல்களுக்கான தொடரை ஆரம்பித்து வைத்தான். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிராக, எண்ணிலடங்கா வன்மச் செயல்கள், அன்னாருக்கு எதிராக காழ்ப்புணர்வு, வஞ்சகம், வெறுப்பு ஆகியவற்றை உமிழ்ந்தான். அவர் மீது கற்களை எறிதல், தமது மனைவியரும், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வியருமான, ருகய்யா மற்றும் உம்மு குல்தூம் ஆகியோரை விவாக விலக்கு செய்யுமாறு தனது மகன்களை ஏவுதல் உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டான். அவனுடைய மனைவியான, உம்ம ஜமீல் என்பவளோ, முறுக்கப்பட்ட பனை இலைகளின் கயிற்றுடன் முட்களை சேர்த்துக் கட்டி, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரக்கூடிய பாதைகளில் பரப்பி வைத்தாள். இதன் மூலம் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உடல்ரீதியாகத் துன்பம் இழைக்க நாடினாள்.
ஒருமுறை, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் புனித கஅபா-வில் ஏகஇறைவனைத் தொழும்வேளையில், தரையில் கிடையாக விழுந்து ஸஜ்தா செய்துகொண்டிருந்தார்கள். அவ்வேளை, உகாபா பின் அபி முஐத் என்பவன், பெண் ஒட்டகையின் அழுகிய கருவைக் கொணர்ந்து, அதனை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் முதுகின் மீது வைத்தான். அங்கிருந்த மக்களிடையே பெருத்த சிரிப்போசை எழுந்தது.
அப்போது, அவ்வழியே வந்த அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அருந்தவப் புதல்வி, ஓடோடி வந்து அவர் மீது வீசப்பட்ட அசுத்தத்தை அப்புறப்படுத்தினார். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தலையை உயர்த்தி, இறைவனிடம் இறைஞ்சினார்கள்: “இறைவனே..! இந்த குறைஷியரை நாசப்படுத்துவாயாக..!”
ஆம்..! பதிலளிக்கப்பட்டது இறைவனிடமிருந்து விரைவிலேயே..! அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு பிரார்த்தித்த, இந்த ஈனச்செயல் புரிந்த ஒவ்வொருவரையும் பத்ர் போர்க்களத்தில், இறைவன் அழித்தொழித்தான்.,!
இஸ்லாத்தின் ஆரம்பக்கட்டத்தில், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சொல்லொண்ணா துன்பங்கள், மிகவும் கொடூரமானவை..! அவர்கள், குறைஷியரால் துன்புறுத்தப்பட்டும்.., கொல்லப்படவும் செய்யப்பட்ட நிகழ்வுகள் ஏராளம்.., ஏராளம்..!
நபித்தோழர் உஸ்மான் பின் அஃப்வான் (ரலி) அவர்களை அவருடைய தந்தையின் சகோதரன் பனை ஓலையால் அவரைக் கட்டி வைத்து, அதன் கீழ் நெருப்பை மூட்டி விடுவான்.
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் தாயார் தனது மைந்தனின் ஏகத்துவத்தின்பால் திண்மைத் தழுவலை அறிந்து, அவரை பட்டினியால் துன்புறுச் செய்து பின்னர் வீட்டை விட்டே துரத்திவிட்டார்.


அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு
தனது அடிமை பிலால் (ரலி)-இன் இஸ்லாமியத் தழுவலை அறிந்த அவருடைய எஜமானன் உமய்யா பின் கலஃப், அவரை மிகப் பயங்கரமாக அடித்துத் துவைத்தான். சிலவேளைகளில், அவருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி, சிறுவர்களைக் கொண்டு தெருக்கள் வழியேயும், மக்கா மாநகரின் குன்றுகளினூடே இழுத்துக் கொண்டு போகச் செய்தான். இதனைக் கவனித்த, அவ்வழியே சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள், அன்னாரை விiகொடுத்து வாங்கி, சுதந்தரம் அளித்தார்.
குறைஷியரின் மற்றொரு இலக்கு அடிமையாக இருந்து விடுதலை பெற்ற, பனீ மக்தூம் குலத்தைச் சார்ந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள்! அவருடன் அவருடைய பெற்றோரும் இஸ்லாத்தை ஆரம்பக் காலத்தில் தழுவியவர்கள்..! சுடும் மணலில் தொடர்ந்து கிடத்தப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள்..! இந்தத் தொர் துன்புறுத்தல்களால், தந்தை யாஸிர் வீரமரணம் அடைந்தார்கள். அபூ ஜஹ்ல்-இன் தொடர்ச்சியான கடுந்துன்புறுத்தலால், வீரமரணம் அடைந்தார் அன்னாருடைய தாயார் சுமய்யா (ரலி) அவர்கள்..! இஸ்லாத்தின் பாதையில் வீரமரணம் எய்த முதல் வீரத்தியாக மங்கை எனும் சிறப்புப் பேறு பெற்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.