மாநில அளவிலான இறகு பந்துப்போட்டி முத்துப்பேட்டையில் வருகிற 25,26ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது!ஏற்பாடுகள் மும்முரம்..  அணிகள் பதிவு செய்ய இன்று கடைசி..

அகில இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படயிருப்பதாக நிர்வாகி தகவல்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ராஜப்பா இறகு பந்து கழகம் மற்றும் அதன் சுற்றுபகுதியில் உள்ள பேட்மிட்டன் கிளப்கள் ஒருங்கிணைந்து நடத்தும் மாநில அளவிலான இறகு பந்துப்போட்டி வருகிற 25ந்தேதி சனிக்கிழமை மற்றும் 26ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவான்னோடை வடகாடு கிராமத்தில் நடைப்பெறுகிறது. இதில் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலிருந்தும் எராளமான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.

இந்த விளையாட்டு போட்டி உள் அரங்கத்தில் நடைபெறுவதால் அதற்காக பிரமாண்டமான உள் அரங்கம் அமைக்கும் பனி கடந்த சிலதினங்களாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பார்வையாளர்கள் அமரும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த போட்டியை ஒருங்கிணைந்து நடத்தும் ராம்மோகன் (படம்) செய்தியாளர்களிடம் கூறுகையில்: மாநில அளவில் நடைபெறும்  இந்த இறகுப்பந்து போட்டி கடந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாக நடத்தினோம் தற்பொழுது மூன்றாம் ஆண்டு போட்டிதான் நடைபெற இருக்கிறது.

இதில் தமிழக முழுவதிலிருந்தும் வீரர்கள் வந்து கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். அதற்காக தங்கும் வசதி உணவு மற்றும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த விளையாட்டு போட்டியில் அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த விளையாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படும், போட்டி குறிப்பிட்ட தேதிகளில் அன்று காலை 6மணிக்கு துவங்கும், மாநில முழுவதும் உள்ள அணிகள் பங்கு பெற பதிவு செய்ய கடைசிநாள் வருகிற 23ந்தேதி (இன்று)இரவு 9மணிக்குள்ளாகும்,

 இதில் எந்த அணிகள் பங்குபெறும் என்ற தகவல்  வருகிற 24ந்தேதி அன்று மாலை 3மணிக்கு பிறகு அறிவிக்கப்படும், இந்த போட்டியில் 'யோநெக்ஸ் மவிஸ் பால்' உபயோகப்படுத்தப்படும் இதில் பங்கு பெரும் விளையாட்டு வீரர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து பங்கு பெறலாம் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.