சுவனத்தின் இன்பங்கள் – 2பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.) (அல்-குர்ஆன் 43:71)

‘சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்’ (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 69:24)

அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும்,  ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்;  அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் – (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று. (அல்-குர்ஆன் 18:31)

நோயும் மரணமும்: –

இந்த உலக வாழ்க்கையில் உள்ள வேதனையில் ஒன்று தான், தான் விரும்பியவர்களின் நோயும் மரணமும்,  ஆனால் சுவர்க்கத்தில் இவை இரண்டுமே இல்லை. யாரும் நோய் வாய்ப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி கூறும்போது: –சமுதாய உறவுகள்: –

சுவர்க்கவாசிகள், தீய மற்றும் வேதனை தரக் கூடிய விமர்சனங்களையோ பேச்சுக்களையோ ஒரு போதும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே கேட்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: –

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (அல்-குர்ஆன் 56:25-26)

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: ‘இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் – நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்’ (இதற்கு பதிலாக, ‘பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். (அல்-குர்ஆன் 7:43)

“சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர் வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ அடைய மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றுபோல இருக்கும். அவர்கள் இறைவனை காலையிலும்,  மாலையிலும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்”என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

சுவர்க்கத்திலே அவர்கள் மிகச்சிறந்த தோழர்களோடு இருப்பார்கள்: –

அல்லாஹ் கூறுகிறான்: –

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.(அல்-குர்ஆன் 4:69)

சொர்க்கவாசிகளின் இதயங்கள் சுத்தமானதாகவும், அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும், அவர்களுடைய செயல்கள் சரியானதாகவும் இருக்கும். அங்கே தீங்கு தரக்கூடிய, வேதனை ஏற்படுத்தக் கூடிய, கோப மூட்டக் கூடிய பேச்சுக்கள் இருக்காது.
அவர்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டார்கள், மூக்குச் சிந்தவோ எச்சில் துப்பவோ மாட்டார்கள்” (புகாரி)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.