திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் 3 வீடுகளில் 32 பவுன்நகை, ரூ.30ஆயிரம் திருட்டு.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு எம்கேஎம் காலனியில் 10 வீடுகள் உள்ளன. இதில் குடியிருக்கும் தாஹிருனிஷா (42), அங்கன்வாடி பணியாளர் பாலசங்கீதா (35),யூசுப்ரகுமான் (37). ஆகியோர் வீட்டைபூட்டி விட்டு வெளி இடங்களுக்கு சென்று விட்டனர்.நேற்று முன் தினம் இரவு திருட வந்த மர்ம நபர்கள் காலணியில் பக்கத்து  வீடுகளில் முன்பக்கம் கதவை தாழ்ப்பாழ் போட்டு விட்டு பின்னர் 3 வீடுகளிலும் முன்பக்கம் கதவில் உள்ள தாழ்ப்பாளை நெம்பி உள்ளே சென்று திருடியுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல பால்காரர் வந்து கூப்பிடும்போது வீட்டில் உள்ளவர்கள் யாரும் வரவில்லை.

சந்தேகப்பட்டு கதவை தட்டும் போது கதவு வெளியே தாழ்ப்பாழ் போட்டது தெரியவந்தது. இதன் பிறகு தான் பூட்டியிருந்த 3 வீடுகளிலும் திருட்டு போனது தெரிய வந்தது. இதில் தாஹிருனிஷா வீட்டில் 5 ஆயிரம் பணம், 15 பவுன் நகை, பாலசங்கீதா வீட்டில் 20 ஆயிரம் பணம், 7 பவுன் நகை, யூசுப்ரகுமான் வீட்டில் ரூ4,800 பணம், 10 பவுன் நகை மேலும் இவர் வீட்டில் வெளிநாட்டு பணங்களும் திருட்டு போயின.

காலனிக்கு முன்புறம் வாட்ச்மேன் தங்கராசு ( 73) என்பவரது வீட்டு கொட்டகையில் நுழைந்து ரூ.1000, ஸ்கூல் பேக்கையும் திருடி சென்று விட்டனர். மேலும் காலனிக்கு அருகே உள்ள நாச்சியார் காலனியில் மலர்வண்ணன்  வீட்டில் அவரது  அண்ணன் காந்திராஜா நிறுத்தியிருந்த இருச்சக்கர வாகனம் திருடு போய் விட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருவாரூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகையை பதிவு செய்து சென்றுள்ளனர். ஒரே இரவில் ஒரே காலனியில் 3 வீடுகளில் திருட்டு போன சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.