அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 3பலதரப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கிய ஒரு சமூக அமைப்பைக் கொண்டதாக இருந்தத அரபிய சமூக அமைப்பு எனலாம். சமூகத்தில் பெண்களுக்கு மிகக் கண்ணியமான மதிப்பும் உயரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டது. மகளிர் சுய அதிகாரத்துடனும் சுயகவுரவத்துடனும் திகழ்ந்தனர். அநேக வேளைகளில், பெண்களின் முடிவுதான் இறுதிமுடிவாக பிரயோகிக்கப்பட்டது. ஏந்த அளவுக்கெனில், அவளுடைய மதிப்பும் மரியாதையும் காக்கப்படுவதற்காக, சிலசமயங்களில் இரத்த ஆறும் ஓடும். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஆண், பெண் தொடர்பு எனும் பந்தம், அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. இதுவிஷயத்தில் காப்பாளர்களின் முடிவு எந்நிலையிலும் கேள்விக்குறியாக்கப்பட்டதில்லை.
மற்றொருபுறம், தரங்கெட்ட ஒழுக்கமும், விபச்சாரமும் பல்கிப் பெருகிய பல சமூக அமைப்புக்களும் விரவியிருந்தன.அங்ஞானக்கால அரபியர் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். மேலும்,இரு சகோதரிகளை ஏககாலத்தில் மணந்து கொண்டனர். இறந்த தங்களது தந்தையின்மனைவியை,அல்லது தங்கள் தந்தை விவாகரத்து செய்த பெண்ணை (அதாவது,மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே இருந்தது.விவாக விலக்கைப் பொறுத்தவரை, முழு அதிகாரமும் கணவனின் கையில்தான் இருந்தது. அஞ்ஞானக்கால அரபியர்கள் தமது பிள்ளைச் செல்வங்களுடன் பேணி வந்த உறவுமுறையைக் கண்டால், அரபியரின் இந்த வாழ்க்கையில் ஒருஇருண்ட சித்திரத்தைக் காண முடியும். அரபியர்களின் ஒரு பிரிவினர், தமது குழந்தைகளை தம் நெஞ்சத்து நெருக்கமானவர்களாக.., அபரிமிதமான அன்புக்குரியவர்களாக நடத்த.., மற்றொரு பிரிவினரோ, அவமானம் மற்றும் வறுமைக்குப் பயந்து தாம் பெற்ற பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் மிகக் கொடூர நெஞ்சம் கொண்டவராகத் திகழந்தனர்.
குடும்பத்துடன் இயைந்த அவர்களின் ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான பந்தத்தையும் அரபியர்கள் வாழ்வில் நாம் இன்னொரு அம்சமாகக் காண முடிகின்றது.ஆம்..! குடும்பம் அல்லது குலப்பெருமை அவர்களது மாபெரும் மானப் பிரச்னையாகக் கொள்ளப்பட்டது. இனவாதமும், இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் ஆணிவேரா திகழ்ந்தன.
‘உன் சகோதரனுக்கு நீ உதவி செய், அவன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே.,!’ எனும் பழமொழியின் பொருளுக்கேற்ப அவர்கள் வெளிப்படையாகவே நடந்து கொண்டார்கள்.!
சுருங்கக்கூறின் அவர்களிடையே பரவிக் கிடந்த தொடர்ச்சியான அக்கப்போர்களின் விளைவாக, பரஸ்பர குல-கோத்திர தொடர்புகள் சீர்கெட்டு,சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. எனவே, அஞ்ஞானக்கால அரபிய தீபகற்பத்தின் சமூக நிலைமையை நாம் இவ்வாறு சுருக்கமாகக் கூறமுடியும்: அதாவது, அவர்கள் இருள் படர்ந்த அறியாமையில் முக்கி மூழ்கிக் கிடந்தனர். பேண் என்பவள் ஒரு சந்தைப் பொருளாகவும், பொதுச் சொத்தின் அங்கமாகவும் நடத்தப்பட்டாள்.!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.